dinamalar telegram
Advertisement

பெகாசஸ் வழக்கு: வல்லுநர் குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு

Share
புதுடில்லி: மேற்காசிய நாடான இஸ்ரேலின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், வல்லுநர் குழு அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்து உள்ளார்.


அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டு கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


இது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மறைப்பதற்கு எதுவும் இல்லை. போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக நிபுணர்கள் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு விரும்பவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியதாவது: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு வல்லுநர் குழுவை அமைக்க உள்ளது. இது குறித்து அடுத்த வாரம் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த வாரத்திலேயே உத்தரவு பிறப்பிக்க விரும்பினோம். ஆனால், குழுவில் இடம்பெற நாங்கள் பரிந்துரை செய்ய நினைத்த சிலர், தனிப்பட்ட காரணங்களுக்காக மறுத்தனர். இதனால், தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  விவசாயிகள் போராட்டத்தில் நீதி மன்றம் நியமித்த குழு அறிக்கை சமர்ப்பித்து ஒரு மாமாங்கம் ஆகியும் நீதி மன்றம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. ஆக்ஸிஜன் விஷயத்தில் அமைத்த task force இன்னும் அறிக்கை கொடுக்க வில்லை. (ஒரு வாரத்திற்குள் கொடுக்க உத்தரவு) நீதி மன்றம் தனது திறமையை மேம்படுத்தினால்தான் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.

 • r ravichandran - chennai,இந்தியா

  உளவு என்பது ஒரு நாட்டிற்கு அவசியம் தேவை என்று சானக்கியரின் அர்த்த சாஸ்திரம் சொல்கிறது. அதுவும் நம்மை சுற்றிலும் தீவிரவாதிகள் நாடும், எல்லை தாண்டும் நாடும் இருக்கும்போது அவசியம் உளவு அவசியம். சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் என்ற போர்வையில் அந்நிய சக்திகளுக்கு உதுவுபவர்கள் இருக்கும் நிலையில் உளவு அவசியம். தவறு செய்யாதவர்கள் அஞ்ச வேண்டியது இல்லை. IB , RAW, CBI என்ற உளவு அமைப்புகள் இருந்தும் தீவிரவாத செயல்கள் நடந்தன. அமெரிக்காவில் நாசா, FBI, CIA என்ற உளவு அமைப்புகளின் செலவுகள், வழி முறைகள் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் , எதிர் கட்சிகள் , மற்ற எந்த அமைப்புகளும் கேள்வி கேட்க மாட்டார்கள். அங்கு நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நமது சுப்ரீம் கோர்ட் கூட சிறப்பு குழுவின் அறிக்கையை வெளியிட கூடாது நாட்டின் நலன் கருதி.

 • jayvee - chennai,இந்தியா

  ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் தன்னிச்சையான இந்த முடிவை முடக்கவேண்டும்.

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   எதுக்கு பயப்படுறீங்க ஜீஜி ,

 • GMM - KA,இந்தியா

  உச்ச நீதிமன்றம் பெரிதா?அரசு நிர்வாகம் பெரிதா? நாட்டின் பாதுகாப்பு தான் பெரிது. பாதுகாப்பிற்கு உளவு தகவல் அவசியம். நிபுணர்கள் குழு உளவு பிரிவு அதிகாரிகள் போல் ரகசியம் காக்கும் முறை அறிந்து இருக்க மாட்டார்கள்.? ஆனால், புரியாத காரணத்தினால் தேவைக்கு அதிகமான கேள்வி கேட்பார்கள். மீடியா பலவாறாக சொந்த கருத்து தினமும் வெளியிடும். குழப்பம் அதிகரிக்கும். எதிரி நாடுகள் உஷார் ஆகிவிடும். பிரச்சனை அரசியல் ஆக்கப்படும். முக்கிய விவரம் கசிந்தால் குற்றவாளிகள் தப்பி விடுவர். உளவு பிரிவு தகவல் மூலம் ஒருவரை தண்டிக்க அரசு நீதிமன்றம் நாடி, விவரம் கூறித்தான் ஆக வேண்டும். நிபுணர்கள் குழு அறிக்கை கொண்டு, நீதிமன்றம் மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்க முடியாது? ( மறைந்த பிரதமர் இந்திராவின் தேர்தல் தீர்ப்பு தனி விவகாரம். அவலை நினைத்து உரலை இடிக்க முடியாது.) வல்லுனர் குழுவை நீதிமன்றம் தவிர்ப்பது நல்லது.

 • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

  அதெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க முடியாது ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் உளவு பார்த்தார்கள் என்றால் அதை நிரூபிக்க வேண்டும். எவன் நிரூபிக்க முடியும் என் போனை ஒட்டு கேட்டார்கள் என்று? அது ஆப்ரேட்டிங் சிஸ்டத்திர்க்கே தெரியாமல் ஊடுருவும் ஒரு சாப்ட்வேர் அது இருப்பதையும் கண்டு பிடிக்க முடியாது எந்த விஷயமும் ஒட்டு கேட்கப்பட்டதாக சொல்லப் படுகிறதோ அதை நீதிமன்றத்தில் பலர் முன் இவர்கள் ரெக்காட் செய்திருந்தால் போட்டு காட்ட வேண்டும் அப்படி போட்டு காட்ட முடியுமா?

Advertisement