dinamalar telegram
Advertisement

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

Share
தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஸ்வேதா என்ற கல்லூரி மாணவியை, ராமச்சந்திரன் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். கத்தியால் குத்திய ராமச்சந்திரனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.படுகாயமடைந்த இருவரும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, ஸ்வேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமச்சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில், ரயில் நிலைய வளாகத்தில் நடந்த கொலை சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த ஸ்வேதா குரோம்பேட்டையை சேர்ந்தவர், ஒரு தலைக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (61)

 • kanisha - CHENNai,இந்தியா

  அரசு கொடுப்பதாக சொன்ன அறுபதாயிரத்திற்கான முயற்சி தோல்வி அடைந்து இருக்கும் போல அதுதான் கொலை வரை நீண்டுவிட்டது போல இருக்கிறது

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  முதல்வருக்கு இந்த செயதியை யாராவது படித்து சொன்னார்களா ?சத்தமா சொல்லுங்க .அவருக்கு இருக்கிற வேளைகளில் இந்த செயதி அவர் காதுக்கு போயி இருக்காது

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

  பெற்றோர் வளர்ப்பு சரியில்லை ...சென்னை மற்றும் புறநகரில் எந்த ஒரு ரயில்நிலையம் அல்லது பஸ்நிலையத்தில் பார்த்தாலும் பெரும்பாலான நேரங்களில் கல்லூரி மாணவ மாணவியர் அல்லது இளம் பெண்கள், பையன்கள் எதிர்பாலின ஜோடி இல்லாமல் இருப்பதில்லை ..அவர்களது நெருக்கம், பேசும் விதம் இழைதல், ஈஷல், என்று ஒவ்வொன்றும் சந்தேகப்படும் வகையில்தான் இருக்கும் .....இதற்கு திரைப்படம், சின்னத்திரை மற்றும் ஊடகங்களும் பெரும் காரணம் என்பதை மறுக்க இயலாது .... இந்த அட்டகாசத்தை அடக்குவதற்காகவே மாரல் போலீஸ் தேவை ....நாலு நல்லவன் அடிஉதை பட்டால் கூட , நாலாயிரம் அசிங்கம் பிடித்தவர்கள் அடிபடுவார்கள் அல்லவா?

  • mathimandhiri - chennai,இந்தியா

   அது சரி,, இது கொலையில் தான் முடியா வேண்டுமா? சினிமாவில் வேலை வெட்டி இல்லாத தறுதலையை சோத்துக்கு என்ன பண்ணுவான் என்று கூட தெரியாத பொறுக்கியை பெரிய வசதியான வீட்டுப் பெண் விழுந்து விழுந்து காதலிப்பதாக தான் காட்டுவான்//// பல படங்களில் இப்படி வரும்////நிஜ வாழ்க்கைப் பொறுக்கிகளும் தான் கண் வைத்த பெண்ணும் தன்னை காதலித்து தான் ஆக வேண்டும் என்று நினைக்கிறான்// அவனுக்கு தெரியும் இங்கு நடவடிக்கை எல்லாம் ஜுஜுபி என்று////.

 • mathimandhiri - chennai,இந்தியா

  குற்றவாளியின் எதை வெட்ட வேண்டுமோ வெட்டி நீதியை நிலை நாட்டுவார்கள்///இங்க இல்ல வேற நாடா இருந்தா//////இங்க கொலையானவர்களின் சுற்றத்தார் தான் சேனல் மற்றும் ஜாதி தலைவனுங்க ஆது இதுன்னு நடுங்கி டார்ச்சர் அனுபவிக்கணும்/ ஏன்னா இது ஆம் ஆந்த மண்ணு.புரிஞ்சுக்கங்க.

 • பேசும் தமிழன் -

  ஊடக திருடர்கள்... செய்தி போட மாட்டார்கள்.... விவாதம்... நோ சான்ஸ்..... இன்னும் கொஞ்ச காலத்துக்கு.... மீடியா காரர்களுக்கு காதும் கேட்காது... வாயும் ஊமை ஆகி விடுவார்கள்.... நடப்பது விடியல் அரசு

Advertisement