dinamalar telegram
Advertisement

கிராம சபை கூட்டத்தில் அனைத்து மக்களின் குரல் வலுவாக ஒலிக்க வேண்டும்: கமல்

Share
சென்னை: ‛‛கிராமங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும்,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கிராம சபைகளை கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. கோவிட் பெருந்தொற்றுக்கு இவர்களுக்கு மிக வசதியான ஒரு காரணமாக அமைந்தது. தேர்தல் பிரசாரம், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை, பதவியேற்பு என எதையும் தடுக்காத கொரோனா, கிராம சபை நடத்தப்பட வேண்டிய நாள் வந்ததும் தலைவிரித்தாடியது.




சுமார் 615 நாட்களுக்கு பிறகு, வரும் அக்.,2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு ஒப்பு கொண்டு உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தான் கிராம சபை நடக்கிறது. ம.நீ.ம.,விற்கு இது முதல் உள்ளாட்சி தேர்தல். நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேர்தல், நடக்காத மாவட்டங்களை சேர்ந்த ம.நீ.ம., உறுப்பினர்கள் அனைவரும் கிராம சபைகளில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.


கிராமங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வளச் சுரண்டல் டாஸ்மாக், கைவிடப்படும் நீர்நிலைகள் குறித்து கவனம் கொள்ள கிராம சபை கூட்டங்கள் உதவட்டும்.


இந்த சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிக வலுவானவை. கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொது வெளியில் வைக்கவும், கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதையும், நாம் உறுதி செய்ய வேண்டும். கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்து உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

 • C.SRIRAM - CHENNAI,இந்தியா

  தனது சுய நலத்துக்காகவே தேவையில்லாமல் கூட்டம் கூட்டி அடங்கி இருக்கும் (வைரஸ்) பிரச்னையை பெரிதாக்க முயற்சிக்கிறார். இது உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது . இவர் நடத்தும் கூத்ததால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை .

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இன்னுமா சப்பாணி கமல் நம்ம தமிழக மக்களை .அதுவும் கிராம மக்களை நம்புகிறார் ?இவிங்க சண்டியர் னு பெயர் வைக்க அனுமதிக்க மாட்டாங்க ஆனா சண்டியர்களையே தேர்ந்தெடுப்பாங்க ஏனென்றால் அதுவே 'திராவிடம் ?

 • S. Narayanan - Chennai,இந்தியா

  கமல் அவர்களுக்கு கொடுக்க பட்டு உள்ள அடுத்த சான்ஸ். கமல் இந்த முறை இந்த தேர்தலை முறையாக சந்தித்தால் மக்கள் மனதில் நிச்சயம் இடம் பெற முடியும். வாழ்க வளர்க. மகால் பாகு paadu வேண்டாம்.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  ஆண்டவரே இப்போ புதுசா எதுனா சேத்துனு கீறியா? சும்மா ஷோக்கா எதுனா கூட்டினு ஜோடியா வந்தீன்னு வெயி, விசிலு சத்தம் பொளக்கும், facebookla likes பிச்சிக்கும், ஆமென்

 • M Ramachandran - Chennai,இந்தியா

  சுடாலின் மாதிரி போட்டி கிராமசபை மற்றும் மற்ற யேமாற்று வேலையயை தொடரவும். தமிழ்நாட்டில்யிளிச்சவாயர்களுக்கு பஞ்சமில்லைய. எது சொல்லியும் ஏமாற்றலாம். பலன் கொடுக்கும். பொய் சொல்ல தெரியாவிட்டால் இஙகு போணியாகாது.

Advertisement