dinamalar telegram
Advertisement

தி.மு.க.,வின் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும்: பழனிசாமி

Share
திருப்பத்தூர்: ''உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற வேண்டும்,'' என அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

திருப்பத்தூரில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது பழனிசாமி பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும்.

நீட் தேர்வு விவகாரத்தில், மக்களிடம் பச்சைபொய்யை தி.மு.க., தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது. அக்கட்சி அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிலிண்டர் மானியம் ரூ.100, முதியோர் ஓய்வூதியம் உயர்வு போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது?
லோக்சபா தேர்தலின் போது தி.மு.க., கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை அளித்தது. சட்டசபை தேர்தலின் போதும் அதே வாக்குறுதியை அறிவித்தது. தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என அறிவித்து, அதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்ததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க.,வினர் வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை சொல்லி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (42)

  • Ram - Thanjavur,இந்தியா

    (E) edappadi (P) pannerselvan (s) Sasikala ... ethu eppadi irukku

  • Ram - Thanjavur,இந்தியா

    அப்புறம் நான் விளையாட்டா பேசுனதெல்லாம்ம் அப்படியே நம்பிட்டேங்க ஆவு

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

    இவர் முந்தைய தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் இன்னும் எனோ நிறைவேற்றவில்லை EPS எப்போ செய்வீர்கள்

  • Visu Iyer - chennai,இந்தியா

    சசிகலா அம்மாவுக்கு பயந்து அப்ப்போலோவில் இருந்து ஓடி ஒளிந்தவர் நம்ம சாமி... சின்னம்மா விடுதலை ஆகி வருகிறார் என்றதும் காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்தவர் நம்ம சாமி... அடிப்படை அரசியல் நிர்வாகம் தெரியாத மக்கள் நம்பிக்கை துளி கூட பெறாதவர் நம்ம சாமி... அட.. யாருங்க... அந்த சாமி என்று கேட்கறீங்க புரிகிறது... அதை நான் எப்படி சாமீ சொல்றதுன்னு வெட்கத்துல தலை குனிந்து நிற்குது... தொண்டர் படை..

  • Visu Iyer - chennai,இந்தியா

    என்னது தேர்தலா.. .?. இரட்டை இலை சின்னத்தை முடக்கி விட்டார்களா...? சின்னம்மா தான் கட்சியின் பொது செயலாளர் என்ற வழக்கு முடிவுக்கு வந்து விட்டதா...? சின்னம்மா களம் இறங்குகிறார்களா? இப்படி அடுத்தடுத்த பரபப்பு செய்தி வரும் என்று காத்துகிட்டு இருக்கீங்களா..? கொஞ்சம் அந்த பக்கம் பாருங்க..

Advertisement