டில்லியில், ஒரு தனியார் நட்சத்திர உணவகத்திற்கு, பெண் ஒருவர் புடவை அணிந்து சென்றுள்ளார். எனினும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காத உணவக ஊழியர்கள், 'மேற்கத்திய உடையில் வந்தால் மட்டுமே, உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்' என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஊழியரிடம், அந்த பெண் உரையாடும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' ஒன்று, தற்போது வெளியாகி உள்ளது.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, 'பேஸ்புக், டுவிட்டர், 'யுடியூப்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 2.25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், இந்த வீடியோவை பார்த்து உள்ளனர். இதை பார்த்த பலரும், தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
மறுப்பு
இந்நிலையில், அந்த உணவக நிர்வாகம் விளக்கம் ஒன்றையும் அது தொடர்பான வீடியோவையும் இப்போது வெளியிட்டுள்ளது. அதில், ‛அந்த பெண் உணவகம் வந்தபோது, முன்பே நீங்கள் இருக்கையை பதிவு செய்யவில்லை. கொஞ்சம் காத்திருங்கள் என்று அமைதியாகச் சொன்னோம். பிறகு அவரை எங்கு அமர வைப்பது என்று ஊழியர்கள் ஆலோசித்தார்கள். ஆனால் அதற்குள் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்த அப்பெண், எங்கள் ஊழியர்களுடன் சண்டை போட ஆரம்பித்தார். அதோடு மட்டுமில்லாமல் எங்கள் மேனேஜரையும் அவர் அறைந்தார்' என்று தெரிவித்துள்ளது. அவர் மேனேஜரை அறையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
வீட்டுல சமைக்காம வெளியில திரிஇர இது போன்ற ஆட்களுக்கு இன்னும் வேணும் .அடக்கமா இருக்கும் எந்த பெண்களும் அசிங்கப்படமாட்டார்கள்