dinamalar telegram
Advertisement

மிகப் பெரிய அளவில் மதமாற்ற நடவடிக்கை; உ.பி.,யில் மதகுரு கைது

Share
லக்னோ: உத்தர பிரதேசத்தில், மிகப் பெரிய அளவில் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லிம் மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூனில், டில்லி ஜாமியா நகரை சேர்ந்த முப்தி குவாஸி ஜஹாங்கிர் ஆலம் குவாஸ்மி மற்றும் முகமது உமர் கவுதம் ஆகியோரை, பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர். அவர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம் இருந்து நிதி உதவி பெற்று, காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத மாணவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் மிகப் பெரிய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணை யில் தெரியவந்தது.
இவர்களுக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த அல் - பல்லா அறக்கட்டளையில் இருந்து 57 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டதும் தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.இந்த வரிசையில், உ.பி.,யின் மீரட்டை சேர்ந்த மதகுரு மவுலானா கலீம் சித்திக் என்பவரை பயங்கரவாத தடுப்பு படை கைது செய்தது.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், பயங்கரவாத தடுப்பு படை தலைமையகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சித்திக் பல்வேறு கல்வி, சமூக, ஆன்மிக அமைப்புகளின் பேரில், மிகப் பெரிய மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சட்ட விரோத மதமாற்றத்துக்கு மிகப் பெரிய அளவில் வெளிநாட்டு நிதியும் வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துஉள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (74)

  • Aarkay - Pondy,இந்தியா

    அப்படியே கொஞ்சம் இந்தப்பக்கமும் கவனியுங்கள். இங்கே மதம் மாறிய எவரும், தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்வதில்லை.

  • அப்புசாமி -

    அடப்பாவிங்களா... உங்க மத மாற்றத்துக்கு கை, கால் ஊனமானவங்க, காது கேக்காதவங்க, வாய் பேசாத்வங்களா கிடைச்சாங்க? குறிவெச்சு தாக்குறதுக்குத்தான் லண்டனிலிருந்து பணம் வாங்குனீங்களா? நல்லா வருவீங்கடா...

  • Balaji Radhakrishnan -

    இவனை ஜாமீனில் விடக்கூடாது. இவனை வைத்து மற்றவர்களையும் பிடித்து இவர்கள் ஆயுள் முழுவதும் வெளியே வரமுடியாத கடும் தண்டனை வழங்கவேண்டும்.

  • maharaja - திருநெல்வேலி,இந்தியா

    காசுக்காக போறவன பத்தி நாம ஏன் கவலைப்படணும். நம்ம மதம் அவ்வளவு வீக்கா என்ன? பதில் ஒழுங்கா சொல்லுங்க.

    • Milirvan - AKL,நியூ சிலாந்து

      அதானே? அமூதி மார்க்கத்திலிருந்து வேற பக்கம் போறவன பத்தி நாம ஏன் கவலைப்படணும்? பத்துவா போட்டு ஏன் கொல பண்ணனும்..? நம்ம மதம் அவ்வளவு வீக்கா என்ன?

  • INNER VOICE - MUMBAI,இந்தியா

    கேரளாவில் இன்னமும் இது சம்பந்தமான விவரத்தை சொன்ன சர்ச்சின் போதகர் சர்ச்சை தீர்ந்தபாடில்லை.அரசும் மௌனமாக இருப்பதாக எதிர் கட்சிகளும், சில ஊடகங்களும் கூறுகின்றன. என்னதான் நடக்குது ஒன்னும் தெரியலையே கடவுளே.

Advertisement