dinamalar telegram
Advertisement

டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 300 நாட்களை கடந்தது

Share
புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நேற்று 300வது நாளை நிறைவு செய்தது.

புதிய வேளாண் சட்டங்களை பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டில்லியின் எல்லையில் அவர்கள் நடத்தும் தொடர் போராட்டம் நேற்றுடன் 300 நாட்களை நிறைவு செய்துள்ளது.
போராட்டத்தை வழிநடத்தும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் அறிக்கை: டில்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரும் இந்த அறப்போர் 300 நாட்களை கடந்துள்ளது.

எங்கள் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு தெளிவாக தெரிந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எனவே ஏற்கும் வரை போராட்டம் தொடரும். எங்கள் தரப்பில் வரும் 27ம் தேதி 'பாரத் பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

 • DVRR - Kolkata,இந்தியா

  கனடாவின் காலிஸ்தான் "வேலைக்கு ஆள் தேவை" விளம்பரம். உட்கார்ந்த இடத்தில் உங்களுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு குத்தாட்டம் ஹூக்கா இன்னும் என்ன என்னவோ நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான் கோடி தூக்கி வேண்டும் நாங்கள் சொல்வதை உரக்க சொல்லவேண்டும். இதற்கு தினசம்பளம் எவ்வளவு நாட்கள் நடக்கின்றதோ அவ்வளவு நாட்களும் சம்பளம். நீங்கள் தங்களை விவசாயி என்று சொல்லிக்கொள்ளவேண்டும். அச்சு அசலாக அப்படியே நடக்கின்றது. இவர்கள் 1) விவசாயிகள் அல்லவே அல்ல 2) வேளாண் சட்டம் என்றால் என்னவென்றே இவர்களுக்கு முதலில் தெரியாது 3) இவர்கள் இடை தரகர்கள் அல்லது இடை தரகர்களால் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள பணி அமர்த்தப்பட்டவர்கள். இது இவர்களுக்கு ஒரு தொழில் அவ்வளவு தான்

 • ஆரூர் ரங் -

  பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் முடியும்😉😉 வரை இந்த போராட்ட நாடகம் தொடரும்

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  பணக்கார விவசாயிங்க ஏழை விவசாயிகளை ஒழிக்க முடியாது. இந்த சட்டங்கள் இருக்க தான் செய்யும்.

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  ஆண்டுப் போராட்டம் - மாண்டவர் பலருண்டு. ஆண்டவரும் - ஆள்பவரும் முடிவுக்கு வர முயற்சி எடுக்க முன்வருவார்களா ?

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   இந்த சட்டங்களில் என்னென்ன குறைகள் உள்ளன, அவற்றால் தாங்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளோம், படுகிறோம் என்று சொல்லாமல், சட்டங்களை முழுவதுமாக வாபஸ் வாங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் சொல்லும்வரை, இந்த பிரச்சினைக்கு (பிரச்சினை என்று சொல்லப்படும்) தீர்வு காண அரசு முன்வராது என்பது நிச்சயம்.... போராட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு கட்டுப்படவில்லை, அரசின் முயற்சிகளுக்கு செவி சாய்க்கவில்லை. ....தாங்கள் சொல்வதைத்தான் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள்.. அது ஜனநாயக நாட்டில் செல்லாது.. "மாண்டவர் பலருண்டு" என்று நீங்கள் சொல்லும் கருத்துக்கு ஆதாரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ......

 • தத்வமசி - சென்னை ,இந்தியா

  அறுநூறு நாட்களை கடந்தாலும் இந்த சோம்பேறிகளுக்கு, விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் இடைத்தரகர்களுக்கு சோறு போட காங்கிரஸ், காலிஸ்தான் போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டிலும் கோவில்களில் அன்னதானம் என்று தமிழக திமுக அரசு அறிவித்துள்ளது. இங்கும் இது போன்ற ஒரு விஐபி கூட்டம் நடுநோட்டில் நிற்க வந்தால் அவர்களை வளர்க்க இந்த அன்னதானம் தேவைப்படும். தில்லியில் நாடகமாடும் கூட்டத்திற்கு காங்கிரசும் காளிஸ்தானும் சோறு போட்டு இடைத்தரகர்களை உருவாக்கி வருகிறது.

Advertisement