dinamalar telegram
Advertisement

வரைவுக்குழுவுக்கு தலைமை ஏற்பதை கவுரமாக கருதுகிறேன்: கஸ்தூரி ரங்கன் நெகிழ்ச்சி

Share
பெங்களூரு: புதிய கல்விக் கொள்கையின் கீழ், பாடத் திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கஸ்துாரி ரங்கன், தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை கவுரவமாக கருதுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஒப்புதல்கடந்த 2020-ம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29ம் தேதி ஒப்புதல் அளித்தது.இந்த புதிய கல்விக் கொள்கையின்கீழ், பள்ளிக் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை உருவாக்க, கஸ்துாரி ரங்கன் தலைமையில் 12 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவை அமைத்து, மத்திய கல்வித் துறை அறிவித்தது.

இக்குழுவினர், குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை வடிவமைக்க உள்ளனர். இக்குழுவில், ஜாமியா மில்லியா இஸ்லாமியபல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர், பஞ்சாப் மத்திய பல்கலை வேந்தர் ஜக்பீர் சிங், ஆந்திராவின் மத்திய பழங்குடியின பல்கலை வேந்தர் கட்டிமணி, ஜம்மு ஐ.ஐ.எம்., தலைவர் மிலிந்த் காம்ப்லே ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

காத்திருக்கிறேன்இந்நிலையில், குழுவுக்கு தலைமை தாங்கும் கஸ்துாரி ரங்கன் கூறியதாவது: மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த பணியை, மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும், கல்வி, பயிற்சி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நன்கு அறிந்தவர்களாக உள்ளனர்; அனைவரும் மிகவும் திறமையான கல்வியாளர்கள்.

அவர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதை பாக்கியமாக கருதுகிறேன். அவர்களுடன் பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  நமது நாட்டின் கல்வி தரத்தை உயர்த்த மத்திய மோடி அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. திரு.கஸ்தூரி ரங்கன் போன்ற அனுபவம் வாய்ந்த அறிவு ஜீவிகளை கொண்டு தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வழி செய்கிறது. தமிழக மாணவர்கள் கல்வியுடன் பல மொழிகளை பயின்று தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழகத்துக்கு கஸ்தூரி ரங்கன் போன்ற விஞ்ஞானிகள் தேவையில்லை லியோனி போன்ற மூன்றாம் தர ஆபாச பேச்சாளர்கள் தான் கல்வித் துறைக்கு தேவை என திராவிட திமுகவின் ஸ்டாலின் அரசு நினைக்கிறது இது தான் ஆளும் திமுக அரசின் தரம். தமிழகத்திற்கு புதிய கல்விக் திட்டம் உடனடி தேவை. வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை.

 • Tamilnesan - Muscat,ஓமன்

  திரைப்பட நடிகர் மயில்சாமி, தமிழன் பிரசன்னா போன்ற சான்றோர்கள் இந்த பணிக்கு பொருத்தமானவர்கள்........ஹா....ஹா...... எப்படி இருந்த நான் (தமிழ்நாடு), இப்படி ஆயிட்டேன்.

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   அனாவசியமா, தமிழன் பிரசன்னா கூட ஒப்பிட்டு மயில்சாமியை இன்சல்ட் பண்ணாதீங்க.... ஒப்பிடும்போது, மயில்சாமி நல்லவர், அறிவாளி ......

 • Arul Narayanan - Hyderabad,இந்தியா

  குழ உறுப்பினர்கள் எல்லோரும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள். ஏற்கனவே இவர்களைப் போன்றவர்கள் தயாரித்த பாடங்களைப் படிக்க முடியாமல் இளஞ்சிறார்கள் துண்பப் படுவதை ஒரு சமூக அறிவியல் ஆசிரியனாக கண்டு வேதனைப் பட வேண்டியுள்ளது. தாங்கள் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க வேண்டியதை எல்லாம் பதின்ம வயது பாலகர்களிடம் திணிக்க முயற்சிக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்களுக்குத்தான் சராசரி பள்ளிக் குழந்தைகளின் புரிதல் திறன் தெரியும்.புதிய குழு புதிய பாணியில் திணிப்பு செய்யும். இந்தக் குழுவிற்கு பதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறந்த பள்ளி ஆசிரியர்களையும் பள்ளிக் கல்வி வல்லுனர்களையும் கொண்ட குழு அமைக்கலாம்.

  • ஆரூர் ரங் - ,

   உலகம் முழுவதும் போட்டி அதிகமாக உள்ள இக்காலத்தில் பாடமுறை🤫 அதிகமாகதானே இருக்கும்? .படிக்க இயலாதவர்கள் பரம்பரைத் தொழில்🙏 செய்யலாம். எந்தத் தொழிலும் கேவலமில்லை . எல்லோரும் பல்லக்கில் ஏறினால் தூக்குவது யார்?

 • ganesha - tamilnadu,இந்தியா

  யோவ் உ பி ஸ், ஸ்டார்ட் மியூசிக்.

 • அப்புசாமி -

  இவர் இவரோட காலேஜ் காலத்தில் பெரிய கல்வியாளரா இருக்கலாம். இன்னிய தேதிக்கு இவர் போன்றவர்களின் கருத்துக்கள் இன்னும் பழமையாகவே இருக்கும்.இவரது கல்வி முறையை இவரது பேரன், பேத்திகளே ஏற்க மாட்டார்கள்.

Advertisement