dinamalar telegram
Advertisement

காஷ்மீர் குறித்து மீண்டும் பேச்சு; ஐ.நா.,வில் துருக்கி அதிபர் சர்ச்சை

Share
நியூயார்க் : ஐ.நா., பொதுச் சபையில் உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை குறிப்பிட்டு பேசியதால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

துருக்கி அரசு ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.கடந்த ஆண்டு துருக்கி அதிபர் தயிப் எர்டோகன், ஐ.நா., பொதுச் சபையில் வெளியிட்ட, 'வீடியோ' அறிக்கையிலும், அவர் பாகிஸ்தானுக்கு பயணித்தபோது வெளியிட்ட அறிக்கையிலும், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பதிவு செய்திருந்தார். இதற்கு, 'இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்' எனக்கூறி, மத்திய அரசு அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஐ.நா., பொதுச் சபை மாநாட்டில், நேற்று முன்தினம் உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன், மீண்டும், காஷ்மீர் விவகாரத்தை குறிப்பிட்டு பேசி உள்ளார். அதன் விபரம்: கடந்த, 74 ஆண்டுகளாக, காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில், துருக்கி அரசு உறுதியாக இருக்கிறது. ஐ.நா., தீர்மானங்களின் வரம்பிற்கு உட்பட்டு, சம்மந்தப்பட்ட இரு தரப்பினரும் அமர்ந்து பேசி, தீர்வு காண வேண்டும்.

சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உய்கர் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.வங்க தேசம் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில், மிகவும் சவாலான சூழல்களில் வசித்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், பாதுகாப்பாகவும், கண்ணியத்துடன் நாடு திரும்ப வேண்டும். அவர்களுக்கு, துருக்கி அரசு என்றும் ஆதரவாக இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  வந்தேறி என்று நான் பலமுறை எழுதியுள்ளேன் , எங்கிருந்து இந்தியாவில் வந்து ஏறியவர்கள் என்று தமிழர்கள் கேட்டிருந்தால் அவர்கள் எல்லாம் துருக்கியில் இருந்து வந்தேறியவர்கள் என்று கூறியிருப்பேன் .துலுக்கர்கள் என்ற வார்த்தை துருக்கியர்கள் என்ற வார்த்தையில் இருந்து மருவி வந்திருப்பதாக நினைக்கிறேன் வாசகர்கள் நீங்க என்ன நினைக்கிறீங்க?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இவர்களின் பேச்சில் காசுமீரை பற்றி பெரியளவில் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. அது நன்கு தெரிந்தது தான். இவர்கள் எதற்காக பேசுகிறார்கள் என்பதை மற்ற அரேபிய தேசங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியாவிற்கு இவர்களின் பேச்சால் ஒரு பங்கமும் இல்லை. காஸ்மீரத்து பகுதியானது மிக பலமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது இன்று. அங்கே ஒரு துரும்பும் நமது கண்ணில் படாமல் அசைந்து விட முடியாது. பாகிஸ்தானம் மற்றும் அவர்கள் ஆதரவை மதத்தின் பெயரால் தரும் சிலர் இந்த பேச்சல் புளகாங்கிதம் அடைவார்கள் என்பதை தவிர அதில் வேறொன்றுமில்லை. சில அந்த மாதத்து சகோதர சகோதரிகள் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்கள் சவுதியில் இருக்கும் பொதும் அங்கு செல்லும் போதும். துருக்கி தான் இந்தியாவை விட பலமடங்கு வலிமையான தேசம் ராணுவம் என்று. துருக்கிக்கு அவர்கள் அப்படி ஒரு ஆதரவு தருவார்கள். சவூதி அரசிற்கு துருக்கி எதிராக செயல்படுகிறது ஆகவே சவுதியில் இருந்து கொண்டு இப்படி பேசினால் சரியாக இருக்குமா உங்களுக்கு. இதை நீங்கள் உள்ளூர் வாசிகளிடம் பெருமை பேசி மாட்டி கொள்ளவேண்டாம் என்று எச்சரித்திருக்கிறேன். இளம் பிறை சந்திரன் வளைவு போல சவுதியை அவர்கள் தலையை சுற்றி வளைக்க முயல்கிறார்கள். அரபு தேசங்களின் ராணுவ வலிமையில் துருக்கிக்கு முதலிடம் உண்டு, வளைகுடா பிராந்தியத்தின் வலிமையில் ஈரானுக்கு அதிக வலிமை உண்டு. இவர்களுக்கு பண உதவி செய்யும் கூட்டாளியாக இருப்பது கத்தார். இவர்கள் கூட்டணி அமைத்து கொண்டு அரபு தேசத்தில் தாங்கள் தான் செல்வாக்கு மிக்கவர்கள் என்றும் அந்த ஐம்பத்தொரு தேச அரபு கூட்டணிக்கு தலைமை வகிக்கவேண்டும் என்பதை உடனடி நோக்கமாகவும், உலகில் முஸ்லீம் அரசை நிர்வகிப்பதை நீண்டதொரு மனப்பாலாக கொண்டுள்ளார்கள் என்று அறிஞர்கள் பலர் எழுதி வந்திருக்கிறார்கள். இதை அறிந்ததால் தான் கத்தாரை சவூதி அரேபிய ஒரே நாளில் கூட்டணியில் இருந்து வெளியேற்றவும் அவர்களின் மீது தடை கொண்டுவரவும் அதை அவர்ளின் ஆதரவு அரசுகள் அனைவரும் செயல்படுத்தவும் செய்தேனா. கத்தாருக்கு அனைத்தும் சவூதி மண்ணின் வழியாகவே போக்குவரத்து நடக்கவேண்டும். சவுதியின் தடைக்கு உடனடியாக துருக்கியும் ஈரானும் விமானம் மற்றும் கடல்வழி உணவு பண்டங்களை அனுப்பி உதவிக்கு சென்றது அனைவரும் அறிந்தது தான். இந்த மூவர்களின் கூட்டணியில் பாகிஸ்தான் பணத்திற்காக சேர்ந்து கொண்டது. பாகிஸ்தான் அரபு தேசங்களை ஒருவாறாக நம்ப வைத்திருக்கிறது. அவர்கள் ராணுவத்தில் வலிமையானவர்கள் என்றும் நியூக்ளியர் திறன் பெற்றவர்கள் என்றும். நமது சர்கிகள் ஸ்ட்ரைக் பிறகு இவர்களின் வலிமை எள்ளி நகையாட பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி வரும் என்கிறார்கள் சீன வரும் என்கிறார்கள் இப்படியே சும்மா பயமுறுத்தும் வேலையை செய்து வந்திருந்தார்கள். சாமானியர்கள் வேண்டுமானால் அதை நம்பலாம். உலகின் தலைசிறந்த ராணுவம் அஞ்சுமா. ஒரே தாக்குதலில் மூச் என்று அவர்களை அமைதி படுத்தியது அல்லவா நமது ராணுவம். எதோ நியூக்ளியர் ஆயுதங்கள் வைத்திருப்பதாக பாவ்லா காட்டுகிறார்கள். அதை முதலில் பெரியளவில் நம்பிய அரபு தேசங்கள் இப்போது புரிந்து கொண்டுவிட்டன.

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  துருக்கியில் உள்ள இஸ்லாமிய பிரிவினைவாதிகளை நமது உளவுதுறை வளர்க வேண்டும் துருக்கியை துண்டாட வேண்டும். பாகிஸ்தான், ஆப்கான், சிரியா போன்று இவன்களையும் பிச்சை எடுக்க வைக்க வேண்டும், அப்போது தான் நம் பேச்சுக்கு வர மாடாங்க இந்த காட்டு மிராண்டி ஜென்மங்கள்.

 • Subash - Chennai,இந்தியா

  இவன் ஒரு தீவிரவாதி.. இப்படி பேசவில்லையென்றால்தான் ஆச்சரியம்.

 • பேசும் தமிழன் -

  இப்போது இருக்கும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களை விரட்டி விட்டு... முன்பு இருந்த (வலுக்கட்டாயமாக விரட்டப்பட்ட) கஷ்மீர் பூர்வகுடிகள்....பண்டிட்களை குடி அமர்த்தினால் எல்லா பிரச்சினையும் முடிந்து விடும்... இதை தான் எகிப்து அதிபர் சொல்ல வருகிறார்

Advertisement