dinamalar telegram
Advertisement

நகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

Share
Tamil News
திருவள்ளூர்-திருவள்ளூர் நகராட்சியில் உள்ள கால்வாய்களை, துார் வாரி சீர்படுத்தும் பணியில், நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து, வெளியேறும் கழிவு நீர், பாதாள சாக்கடை வழியாக, பெரியகுப்பம், புட்லுார் ஏரி அருகில் உள்ள சுத்திகரிப்பு மையத்தில், சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறது.இந்த இடத்தில், கழிவு நீர் குளமாக தேங்கியிருப்பதால், மழை காலத்தில், கழிவு நீருடன், மழை நீரும் சேர்ந்து, தேவி மீனாட்சி நகர், கோவர்தன் தெரு பகுதியில், தேங்கி விடும்.இதையடுத்து, இங்கிருந்து கழிவு நீர், ரயில் தண்டவாளப்பகுதியை கடந்து, கூவம் ஆற்றில் கலக்கும் வகையில், கால்வாய் உள்ளது.இந்த கால்வாயை, ஜே.சி.பி., மூலம், நேற்று, துார் வாரி சீர்படுத்தும் பணி நடந்தது. இப்பணியை, திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் சந்தானம் ஆகியோர் பார்வையிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement