dinamalar telegram
Advertisement

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசிய ஜாவேத் அக்தருக்கு நோட்டீஸ்

Share
மும்பை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசியதற்காக, ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஹிந்தி திரைப்பட பாடலாசிரியராக இருப்பவர் ஜாவேத் அக்தர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கையில் மீண்டும் சிக்கியுள்ளது பற்றி கருத்து தெரிவித்த அவர், 'தலிபான்களின் செயல்கள் காட்டுமிராண்டித்தனமானது. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம் மற்றும் வி.எச்.பி., போன்ற அமைப்பை ஆதரிப்பவர்களின் நடவடிக்கைகளும், அது போன்றது தான்' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்க கோரி, ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்நிலையில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் துபே கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசபக்த அமைப்பு. அதை, தலிபான் பயங்கரவாத அமைப்புடன் ஜாவேத் அக்தர் ஒப்பிட்டது, பெரும் கண்டனத்துக்குரியது. இதற்காக அவர் 'பகிரங்கமாக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்' எனக் கோரி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், அக்தர் மீது 100 கோடி ரூபாய் கேட்டு, மான நஷ்ட வழக்கு தொடர்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

  • spr - chennai,இந்தியா

    "தலிபான்களின் செயல்கள் காட்டுமிராண்டித்தனமானது. "இப்படி உண்மையைச் சொன்னதற்காக தாலிபான் அமைப்பே அவருக்கு தண்டனை தரும் எனவே பிரச்சினையில்லை

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    பசுவிற்கும் பன்றிக்கும் வித்யாசம் தெரியாத கீழ்த்தரமான சிந்தனை கொண்டவன் இவன். இவனை தாரூல் இஸ்லாம் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும், அங்கு ஓடும் பாலாறையும் தேனாறையும் இவன் அனுபவிக்கனும்.

  • jayvee - chennai,இந்தியா

    இவர் பாலிவுட்டின் அப்சல் குரு .. கான்களின் ப்ரோபசர் ..

  • Gopal - Jakarta,இந்தோனேசியா

    இவன் ஹிந்தி சினிமா துறையை சேர்ந்த ஒரு பாக்கிஸ்தான். இவனை எல்லாம் இந்த நாட்டில் இருக்க வைப்பதே ஒரு கேவலம்.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    சினிமா துறை மூர்க்க மதத்தை சேர்ந்தவர்கள் சம்பாதிப்பது இஙகு உள்ள இந்துக்கள் பணம். நன்றி காட்டுவது அந்த மூர்க்க மதத்தை தழுவியுள்ள நாடுகளை. அங்கஹீஆ போய் பார்க்கட்டும் ஓட்ட நறுக்க படும். திமிர் பிடித்த பேச்சிகளய் எப்படி தாக்ரே கும்பல் பொறுத்துக்கொள்கிறது என்பது தெரியா வில்லை. இப்போ அரசாளும் ஆசை வந்ததால் முன்பு போல் அவ்வளவு வீரியம் காட்டுவதில்லை.

Advertisement