dinamalar telegram
Advertisement

குரோம்பேட்டையில் கஞ்சா கும்பல் அட்டூழியம்

Share
குரோம்பேட்டை, நியுகாலனி, அன்னை இந்திராகாந்தி நகரில், பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.தற்போது, இந்த கழிப்பறை பயன்பாட்டில் இல்லை. இதனால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.தினசரி, மாலை 6:00 மணிக்கு மேல், 10க்கும் மேற்பட்டோர், கழிப்பறையின் மேற்பகுதியில் அமர்ந்து, மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.இரவில், போதை தலைக்கேறியதும், சத்தம் போடுவது, மது பாட்டில்களையும், கற்களையும் குடியிருப்புகளின் மீது வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.இதனால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.அசம்பாவிதங்கள் நடக்கும் முன், கஞ்சா கும்பலின் அட்டகாசத்தை ஒழிக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement