dinamalar telegram
Advertisement

அரைகுறை பணிகளால் அல்லாடும் பம்மல் மக்கள்

Share
பம்மல்--பம்மல் நகராட்சியில், மழை நீர் கால்வாய் துார் வாரும் பணி, அரைகுறையாக முடிப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், பருவ மழை துவங்கினால் இப்பகுதியில் மழை நீர் தேங்கி, குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து, பம்மல் பகுதி பொதுமக்கள் கூறிய தாவது:பம்மல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், மழை நீர் கால்வாய்களை துார் வாரும் பணி நடந்து வருகிறது. 20ம் தேதி, சங்கர் நகர் பிரதான சாலையான, காந்தி சாலையில் பணி நடந்தது. இத்தெருவில், இருபுறத்திலும், தலா 1 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் உள்ளது.இதில், சாலையின் கிழக்கு கால்வாயில், 650 அடி துாரத்திற்கு மட்டும் துார் வாரப்பட்டது. அதன்பின், அப்படியே விட்டு விட்டு, மற்ற பகுதிக்கு சென்று விட்டனர். இதனால், கால்வாயை துார் வாரியும் பயனில்லை.ஒரு இடத்தில், பணியை துவக்கினால், அதை முழுமையாக முடித்து, மற்ற பகுதிக்கு செல்வது தான் வழக்கம். ஆனால், சில அடி துாரத்திற்கு துார் வாரிவிட்டு, எஞ்சியுள்ள பகுதியில், சில நாட்கள் கழித்து துார் வாரப்படும் எனக் கூறுவது, ஏதோ கணக்கு காட்டுவதற்கு செய்வது போல் உள்ளது. துார் வாரும் பணியை, அரைகுறையாக செய்யாமல், முழுமையாக முடிக்க வேண்டும். அப்போது தான், அப்பணி எதற்காக செய்யப்படு கிறதோ, அந்த பலன் மக்களை சென்றடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement