dinamalar telegram
Advertisement

சிறு மழைக்கே குளமானது சிட்லபாக்கம் பிரதான சாலை

Share
தாம்பரம்--ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே, சிட்லபாக்கம் பிரதான சாலையில், குளம் போல் மழை நீர் தேங்கியதால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதனால், குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் பிரதான சாலையில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. சாலையில், முழங்கால் அளவுக்கு தேங்கிய நீரில், வாகன ஓட்டிகள், ஊர்ந்தபடி வாகனங்களில் சென்றனர்.சாலையின் இருபுறத்திலும், கால்வாய் வசதி இருந்தும், அவை முறையாக பராமரிக்கப்படாததால், மழை நீர் தேங்கி, போக்குவரத்தை பெரிதும் பாதித்தது. இன்னும் பருவமழை துவங்காத நிலையில், ஓர் நாள் இரவு மழைக்கே, பிரதான சாலை குளமாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்னும் சில தினங்களில் பருவமழை துவங்கி, தொடர்ந்து மழை பெய்தால், சிட்லபாக்கம் முழுதும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து, சிட்லபாக்கம் பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அரசு உத்தரவுப்படி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள, அனைத்து கால்வாய்களிலும், துார்வாரும் பணி நடந்து வருகிறது. அதன்படி, சிட்லபாக்கம் பிரதான சாலையில் உள்ள, கால்வாயும் விரைவில் துார் வாரப்பட உள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகள், ஏரி புனரமைப்பிற்காக கால்வாயை அடைத்ததே, மழை நீர் தேங்க காரணமானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.தென்சென்னை/
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement