ADVERTISEMENT
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் வெலிங்டன் ஏரி கடந்த 1913ம் ஆண்டு கட்டத்துவங்கி 1923ம் ஆண்டு முடிவடைந்தது.
இதன் நீர்பிடிப்பு பரப்பு 16.60 சதுர கி.மீ., கரையின் நீளம் 4,300மீட்டர்.முழு கொள்ளளவு 2 ஆயிரத்து 580 மில்லியன் கனஅடி. இதன் மூலம் 27 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகிறது. நீர்தேக்கத்தின் கரை கடந்த 1996ம் ஆண்டு உள்வாங்கியது.அணை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் பேரில் உலகவங்கி நிதி 5 கோடி ரூபாய் மதிப்பில் கரை செப்பனிடப்பட்டது. இருப்பினும் கரை உள்வாங்குவது ஒவ்வொரு பருவமழையின் போதும் தொடர்கதையாக இருந்ததால் 2007ல் புனரமைக்க முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து 2009ம் ஆண்டில் 29.71கோடி ரூபாயில் கரை சீரமைக்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு முதல் நீர்தேக்கத்தில் நீர்பிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகள் பருவமழை பொய்த்ததால் நீர் பிடிப்பின்றி காணப்பட்டது.கடந்த 2017ம் ஆண்டு வெலிங்டன் நீர்தேக்கத்தின் ஷட்டர்கள், கரை சீரமைப்பு உள்ளிட்டவை 6.5 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இந்த பணி முடிந்து 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், கரையின் 1,600வது மீட்டரில் கரை பதினைந்து மீட்டர் நீளம், மூன்று மீட்டர் ஆழத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு உள் வாங்கியது. பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது. 2018ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் மீண்டும் கரையில் 3,200வது மீட்டரில் லேசான வெடிப்பு ஏற்பட்டது.தொடர்ந்து நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட இடத்தில், தற்காலிகமாக 1.48 கோடி ரூபாய் மதிப்பில் ரிங் வளைவு அமைக்கப்பட்டது. இதையடுத்து வெலிங்டன் நீர்தேக்கத்தின் கரை பராமரிப்பு அணை மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.தொடர்ந்து மத்திய நீர்வள ஆணையக்குழுவினரும் கரையை ஆய்வு செய்தனர்.கரை மேம்பாட்டிற்காக எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.2021 சட்டசபை தேர்தலுக்குப்பின் தொகுதி எம்.எல்.ஏ., வான அமைச்சர் கணேசனின் முயற்சியால், தி.மு.க., இளைஞரணிசெயலர் உதயநிதி் எம்.எல்.ஏ.,வெலிங்டன் ஏரியை பார்வையிட்டு கரை பாதுகாப்பு, நிரந்தர நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடந்து முடிந்த சட்டசபை தொடரில் வெலிங்டன் நீர்தேக்கம் துார்வாரி, கரைகள் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.விரைவில் பணி துவங்கும்அமைச்சர் கணேசன் உறுதிஇதுகுறித்து அமைச்சர் கணேசன் கூறுகையில், 'விவசாயிகள் நலன் கருதி கடந்த தி.மு.க., ஆட்சியில் வெலிங்டன் நீர்தேக்கம் சீரமைக்கப்பட்டு பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டது.
அதன் பின் கரைபாதிப்பு சீரமைக்கப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.வெலிங்டன் ஏரி குறித்து தமிழக முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வெலிங்டனை துார்வாரி, புனரமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!