dinamalar telegram
Advertisement

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Share
வாஷிங்டன்: நான்கு நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, வாஷிங்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அதிகாரிகளும், அமெரிக்க வாழ் இந்திய மக்களும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு, அமெரிக்காவில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க, நேற்று டில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வாஷிங்டன் சென்றடைந்தார். அங்குள்ள ஜாய்ன்ட் ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில், அந்நாட்டு அரசு அதிகாரிகள் மோடியை வரவேற்றனர்.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
அமெரிக்க வாழ் இந்திய மக்களும் விமான நிலையத்தில் பெருந்திரளாக கூடி, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாதுகாப்பு வளையத்தை மீறி, காரிலிருந்து இறங்கிய மோடி, கூடி நின்று வரவேற்பு அளித்த மக்களுக்கு கை குலுக்கினார். அமெரிக்காவில் 25ம் தேதி வரை தங்கியிருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (39)

  • தமிழன் - madurai,இந்தியா

    அப்பப்போ எதோ கருகுன வாட வரல்ல?

  • thamodaran chinnasamy - chennai,இந்தியா

    பாரதத்தின் பிதாமகன் நீடுழி வாழ இறைவனைப்பிரார்த்திப்போம்.

  • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

    சிம்பிள் ::: MODI IS GOOD FOR NOTHING EVEN ANYTHING

    • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

      Good for nothing என்று சொன்ன பிறகு even anything என்று சொல்ல அவசியமில்லை அதுவும் தேவையின்றி பெரிய எழுத்துக்களை உபயோகிப்பது அநா.கரிகம் ஆகா என்னே ஆங்கில அறிவு

    • Gangai Tamilan... - Sivagangai,சூடான்

      உன் வயிறு எனப்ப இப்படி எரியுது????

  • P Sundaramurthy - Chennai,இந்தியா

    பகவத் கீதை : "நடப்பதையெல்லாம் அவையாக நடக்கின்றன , நீ ஒரு கருவியாகவோ , சாட்சியாகவோ மட்டும் இருக்கிறாய் ." நாட்டின் முதன்மை அமைச்சராக யார் சென்றாலும் வரவேற்பு கிடைக்கும் . இதில் பெருமைக்கு ஒன்றும் இல்லை.

    • தமிழன் - madurai,இந்தியா

      உங்க தோழமை நாடு பாகிஸ்தான் கூட நாடு தானே?

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    பாரத பேரரசின் பிதாமகன் திரு.மோடி, இவர் நம் நாட்டின் பெருமை. வந்தேமாதரம் ஜெய் ஹிந்த்.

Advertisement