dinamalar telegram
Advertisement

உமா பாரதி கவனமாகவும், கண்ணியமாகவும் பேச வேண்டும்: திக் விஜய் சிங் கண்டனம்

Share
போபால்: 'அரசு அதிகாரிகள் எங்கள் செருப்புகளை எடுப்பவர்கள்' என பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி சர்ச்சையாக பேசி உள்ளார். அவரது பேச்சுக்கு திக் விஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 'அரசு அதிகாரிகள் எங்கள் செருப்புகளை எடுப்பவர்கள்' எனக் கூறும் வீடியோ, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உமா பாரதி கவனமாகவும், கண்ணியமாகவும் பேச வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து திக் விஜய் சிங்குக்கு கடிதம் எழுதிய உமா பாரதி, 'அதுபோல் பேசியதற்கு வருந்துகிறேன். இனிமேல் வார்த்தைகளை கவனமுடன் பயன்படுத்துவேன். அதுபோல், நீங்களும் முறையாக பேச வேண்டும்' எனக் கூறி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • vbs manian - hyderabad,இந்தியா

    யாகாவாராயினும் நா காக்க .

  • unmaitamil - seoul,தென் கொரியா

    ஐயா திக்கு தெரியாமல் அலையும் சிங்கு.., முதலில் உங்க பப்பு கோமாளிக்கு உபதேசம் பண்ணுங்க. சோறு, சோறுன்னு வீதி வீதியா ஓடும்போது நீங்க எங்க அலைஞ்சுக்கிட்டு இருந்தீங்க சிங்கு. இப்ப வந்துட்டீங்க ???

  • jayvee - chennai,இந்தியா

    உமாபாரதி BJP க்கு ஒரு அவமானம்

  • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

    சைத்தான் வேதம் பற்றி பாடம் நடத்துவதை போல் ........

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    இங்கிருக்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வாய் மிகவும் அதிகம் ... கொஞ்சம் பேச்சை குறைத்து செயலில் ஈடுபட்டால் நல்லது .... முதலில் அசிங்கமாக பேசவும் வேண்டாம், பிறகு rider போட்டு மன்னிப்பு கேட்கவும் வேண்டாம் ........

Advertisement