dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: நாள் முழுதும் அன்னதானம்; ஏன் இந்த வேடிக்கை வேலை?

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.கோபாலன், மகேந்திரகிரி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்செந்துார், சமயபுரம், திருத்தணி கோவில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்திருக்கிறார். இந்த மூன்று கோவில்களிலும் வழங்கப்படும் அன்னதானத்தால், தினமும் 7,500 பக்தர்கள் பயனடைவர். காலை 8:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, அதாவது தினமும் 14 மணி நேரம் உணவு பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

யாரும், மதுரை மீனாட்சி திருமணத்திற்கு வந்த பூத கணங்கள் மாதிரியோ, மாயா பஜார் கடோத்கஜன் மாதிரியோ, 24 மணி நேரமும் வயிற்றுக்குள் உணவை தள்ளிக் கொண்டிருக்க மாட்டார்கள். பெரும்பாலான மக்கள் காலை, இரவு வேளையில் டிபன்; மதியம் மட்டும் சாப்பாடு சாப்பிடுவது வழக்கம். மூன்று வேளையும் யாரும் சாப்பாடு சாப்பிடுவதில்லை. அந்த மூன்று கோவில்களிலும் தினமும் 7,500 பக்தர்கள் பயனடைவர் என, தி.மு.க., அரசு குறிப்பிட்டு உள்ளது.

கோவிலில் தினமும் சராசரியாக 2,500 பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து, அன்னதானம் சாப்பிடுவர் என்பது நிச்சயம் கிடையாது. சில நாட்களில் கூடுதலாகவும் வரலாம்; சில நாட்களில் குறைவாகவும் வரலாம். தினமும் 2,500 பேர்களுக்கு உணவு சமைத்து விட்டால், கூடுதலாக பக்தர்கள் வந்தால் என்ன செய்வர்; பக்தர்கள் குறைவாக வரும் நாட்களில் மீதமாகும் உணவை என்ன செய்வதாக உத்தேசம்?

கோவிலில் இரவு அர்த்த ஜாம பூஜை முடித்து, 9:00 மணிக்கு நடையை அடைத்து விடுவர். அதன் பின், பக்தர்களை எங்கு அமர வைத்து உணவு பரிமாறுவர்? சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வழங்கும் மதிய உணவை, பிச்சைக்காரர்களும், சிறு கடை வியாபாரிகளும் தான் சாப்பிடுகின்றனர். பக்தர்கள் என்று பார்த்தால் 10 பேர் கூட தேற மாட்டார்கள். எதற்காக தமிழக அரசுக்கு இந்த வேண்டாத வேலை? செய்ய வேண்டிய வேலைகள் 1,000 இருக்க, அதையெல்லாம் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டு, கோவில்களில் நாள் முழுதும் அன்னதானம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை அல்லாமல் வேறு என்ன?

எட்டு மணி நேரம் உழைக்கும் தொழிலாளர்களையே 12 மணி நேரம் உழைக்க வைத்து, அதற்கு ஈடாக, வாரம் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், கோவில்களில் உணவு சமைப்போரை 14 மணி நேரம் வேலை வாங்க, தமிழக அரசு உத்தேசித்திருப்பது கொடுமை அல்லவா? இவ்வளவு ஆர்ப்பாட்டமாக, விளம்பரத்திற்காக, நாள் முழுதும் உணவு என, வேடிக்கை காட்டும் தி.மு.க., அரசு தான், வாரம் மூன்று நாட்கள் கோவிலுக்குள் பக்தர்கள் நுழையவே தடை விதித்து இருக்கிறது.கோவிலுக்குள் நுழைய பக்தர்களுக்கு தடை விதித்து விட்டு, நாள் முழுதும் அன்னதானம் என்பது வேடிக்கையாக இல்லையா?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (133)

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  திரு நரேந்திரன் அவர்களே, திருப்பதியில் தேவஸ்தானம், மற்றும் தனியார்கள் ஓரு டிரஸ்ட் அமைத்து அதில் நன்கொடை வாங்கி அன்னதானம் செய்கிறார்கள். இதற்கு தனி டிரஸ்ட். ஆனால் திமுக அரசு செய்வது கோயில் உண்டியல், ticket வருமானத்தில் சோறு போடுகிறது. கோயில் உண்டியல் மற்றும் இதர வருமானங்கள் கோயில் மேம்பாட்டிற்கு மட்டுமே செலவழிக்க வேண்டும். இதற்கு தணிக்கை என்று ஒன்று உண்டு. ஆனால் வருஷ கணக்காக தணிக்கை கிடையாது. கோர்ட் உத்தரவுகள் குப்பை தொட்டியில். ஏன் உயர் நீதிமன்றம் HRCE ஆணையர் மற்றும் செக்ரேடரி இருவரையும் கோர்ட் உத்தரவை மதிக்காததற்கக்காக சிறையில் அடைக்ககூடாது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டிகையே என்பது திமுக வின் தாரக மந்திரம்.

 • தமிழன் - Madurai,இந்தியா

  ஓசில திங்குறவன் ஓட்டு போடுவான்ல? ஹிந்து கோவில்ல பணத்தை புடுங்கி சோத்துக்கு அலையுற கும்பலுக்கு பக்தன் வேஷம் கட்டி அதுல அவனுக்கு 24க்கு ஏழு நேரத்துக்கு சோறு போட்டு... அதுல கொஞ்சம் பாக்கெட்டிக்குள்ள போட்டு... எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வை தான். தீனா மூணா கானா ன சும்மாவா?

 • Narendiran - chennai,இந்தியா

  திருப்பதி ல போய் இதை சொல்லுங்க நூலிபான்ஸ்

 • Rajasekaran - Chennai,இந்தியா

  தமிழக மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று தற்போதைய முதல் மந்திரியின் தந்தையார் இழித்துரைத்தார் . மகனோ அதை நிரூபித்தே தீருவேன் என்று தந்தைக்கு வாக்களித்து விட்டார் போல

 • S. Narayanan - Chennai,இந்தியா

  அப்படியே ஆளுக்கு ஒரு குவாட்ர் குடுதிடுங்க. விடியல் பிறந்து விடும்.

Advertisement