dinamalar telegram
Advertisement

போர்டு நிறுவனத்தை நம்பி உள்ளோர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர் அன்பரசன் உறுதி

Share
சென்னை :''போர்டு கார் தொழிற்சாலையை சார்ந்து செயல்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்காத வகையில், தமிழக அரசால் முடிந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

போர்டு இந்தியா கார் நிறுவனம் மூடுவதால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், போர்டு நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் வினியோகிக்கும், இரண்டாம் நிலை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர்.
கூட்ட முடிவில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:போர்டு நிறுவனம் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்த உடன், 'போர்டு நிறுவனத்தை வாங்க யாராவது முன் வந்தால், அவர்களுக்கு தேவையான உதவியை, தமிழக அரசு நிச்சயம் செய்யும்' என, முதல்வர் அறிவித்தார்.இதே போல, போர்டு நிறுவனத்தைச் சார்ந்து உள்ள, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, நிறுவனங்கள் முன் வைத்துள்ளன. அவர்களுக்கான பாதிப்பின் நிலையை உணர்ந்துள்ளோம். நிறுவனங்களை பாதிக்காத வகையில், அரசால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதை கட்டாயம் செய்வோம். இதுகுறித்து, முதல்வரிடம்
விரைவில் பேசுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்யியில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ், கூடுதல் ஆணையர்கள் ஏகாம்பரம், ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இழப்பீடு தாருங்கள்;கதறிய பிரதிநிதிகள்சிறு, குறு, நடுத்தர நிறுவன பிரநிதிகள் வைத்த கோரிக்கைகள்: போர்டு நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம், 30 சதவீதத்தில் இருந்து, அதிகபட்சம், 80 சதவீதம் வரையிலான உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கிறோம். போர்டு நிறுவனத்தை சார்ந்து, 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறோம். நிறுவனம் மூடல் என்ற அறிவிப்பு பேரதிர்ச்சியாக உள்ளது. போர்டு நிறுவனத்துக்கான உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுப்பதற்காக, சில நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிக முதலீடுகளை செய்துள்ளோம். வாங்கி வைத்துள்ள மூலப் பொருட்களின் இருப்பு அதிகமாக உள்ளது.கொரோனாவிற்கு பின் அனைத்து மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. போர்டு நிறுவனத்துக்காக வாங்கி வைக்கப்பட்ட பொருட்களை, வேறு நிறுவனத்திற்கு பயன்படுத்த முடியாது. நிறுவனத்தை மூடினால், 300க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும்.

அதில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, சிறிய நிறுவனங்கள் பாதிக்காத வகையில், அதற்காக ஏற்படும் இழப்பை, போர்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய நிறுவனங்கள் தயாரிக்கும் உதிரி பாகங்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும், தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த, கால அவசாகம் பெற்றுத் தர வேண்டும். மேலும், மகிந்திரா கார் நிறுவனத்தை அணுகி, அவர்களே இந்த நிறுவனத்தை எடுத்து நடத்த தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்து பேசினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

 • vbs manian - hyderabad,இந்தியா

  தமிழக அரசே போர்ட் கம்பெனியை வாங்கி சமூக நீதி ஊர்தி மேட் இ ன் தமிழ் நாடு என்ற கார்களை தயாரிக்கலாம்.

 • Indhuindian - Chennai,இந்தியா

  வூஷியர்களே ஜாக்கிரதை இதுவும் நீட் தேர்வு ரத்து மாதிரிதான் இவங்க பேசிக்கிட்டே இருப்பாங்க நீங்களும் அது நடக்கும்ன்னு நம்பிகிட்டு நாளை ஒட்டிக்கிட்டு இருப்பீங்க திடீர்னு போர்ட் அமெரிக்கா காரன் இங்கேந்து காணாம போயிடுவான் முன் ஜாக்கிரதையா இருந்து போஷக்கிற வஷியபாருங்க

 • unmaitamil - seoul,தென் கொரியா

  பழைய அதிமுக அரசு இப்போது ஆட்சியில் இருந்தால் பல கார் கம்பெனிகள் போர்ட் கம்பெனியை வாங்க வந்திருப்பார்கள். ஆனால் இப்போது உள்ளது திருடர்களின் ஆட்சி. எவனாவது போர்ட் கம்பெனியை வாங்க வந்தால், அவனது கோமணத்தையே உருவிவிடுவார்கள் என்பது தெரிந்ததால், அடுத்த ஐந்து வருடம் ஒருவனும் தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க மாட்டான். போர்ட் கம்பெனியில் 10% ஷேர் உள்ள கலாநிதி மாறன், முக குடும்பத்துடன் சேர்ந்து போர்ட் கம்பெனியை வாங்கி நடத்தலாமே? ஸ்ரீலங்காவில் 35,000,கோடி முதலீடு செய்யும் முக குடும்பத்திற்கு போர்ட் கம்பெனியை வாங்குவது ஒரு சிறிய காரியம்தான். முக குடும்பம் போர்ட் கம்பெனியை வாங்கி மக்களுக்கு உதவலாம், தொழிலையும் மேம்படுத்தலாம். ஆனால் கட்டப்பஞ்சாயத்தில் வரும் அளவிற்கு இந்த கம்பெனியில் வருமானம் வராது.

 • Vittalanand -

  இவனுங்க பாஷை கம்பெனிக்கு படியாது

 • Vittalanand -

  கம்மிகள் மற்றும் திரா விடர்கள் நுழைந்தால் எல்லாமே பாழ்

Advertisement