dinamalar telegram
Advertisement

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டில்லி பயணம்

Share
சென்னை ;தமிழக கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி, முதல் முறையாக இன்று டில்லி செல்கிறார்.

தமிழக கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், நாகாலாந்து முன்னாள் கவர்னருமான ஆர்.என்.ரவி, கடந்த 18ம் தேதி பதவியேற்றார். அவரை, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, பயங்கரவாதிகள், போதைப் பொருள் நடமாட்டம் உட்பட பல விபரங்களை கவர்னர் கேட்டறிந்தார். கவர்னராக பதவியேற்ற பின் முதன்முறையாக, கவர்னர் ரவி இன்று காலை 7:00 மணிக்கு, விமானத்தில் டில்லி செல்கிறார்.

'அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளார். 'சென்னை திரும்பியதும் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளைச் சந்திக்க உள்ளார்' என, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

டேவிட்சனும் சந்திப்பு



தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் சந்தித்து பேசினார்.தமிழகத்தின் புதிய கவர்னராக, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி பதவி ஏற்றுள்ளார். இவரை, நேற்று முன்தினம் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சந்தித்தார்.

இந்நிலையில், கவர்னரை நேற்று, உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கடலோர பாதுகாப்பு, பயங்கரவாத செயல்கள் கண்காணிப்பு என, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • அப்புசாமி -

    இவர உடுங்க... தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாயிட்டதால் டென்ஷன் ஆன அமித்ஷா இவரை தேர்ந்தெடுத்து கெவுனராப் போட்டதாவும், இவர் தி.மு.க ஆட்சியை வழிநடத்திச் செல்லும் வல்லவராக இருப்பாருன்னும் சோசியல் மீடியாவுல ஏகத்துக்கு பில்டப் குடுக்குறாங்கோ. கோமெடி தாங்க முடியலை.

    • தமிழ்ச்செல்வன் - Chennai

      டீம்கா அடிமையான உனக்கே தெரிஞ்சிருக்கு "வழிநடத்த" முடியாத அதாவது திருத்த முடியாத கட்சி டீம்கா என்று (நேர்மையான அல்லக்கை போலிருக்கு) பாராட்டுக்கள்

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

    இந்த சமயம் பார்த்து மாஜி முதல்வர் பழனியும் மக்களவைத் தேர்தலோடு மாநில சட்டமன்றத் தேர்தலும் வரும்ன்னு சொல்றாரே? டீம்கா அல்லக்கைஸ் நல்லா எகிறி குத்திக்கணும் ஓகேவா ?

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஏ அப்பு , 3 மாசத்தில் மாசுவே 4 தடவை டில்லிக்கு போயிட்டு வந்துட்டாரு. இங்க சென்னையில் கிடைக்காத பஜ்ஜி டில்லியில் கிடைக்குமோ ? இதெல்லாம அவங்கவங்க தனிபட்ட விருப்பம்.

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, பயங்கரவாதிகள், போதைப் பொருள் நடமாட்டம் உட்பட பல விபரங்களை கவர்னர் கேட்டறிந்தாராம் .சென்னை திரும்பியதும் , அரசியல்வாதிகளை சந்திக்க உள்ளார்.

  • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

    என்னமோ தமிழ்நாட்டுலதான் தீவிரவாதிகள் இருக்கிற மாதிரி பெருசா ரிப்போர்ட் எல்லாம் கொடுப்பானுவோ. உண்மையான தீவிரவாதிகள் குஜராத் பக்கம்தன

    • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

      குஜராத் தீவிரவாதிகளுக்கு பணம் தருவது திமுக தேசத்துரோகிகள் ...வேரில் வெந்நீர் ஊற்றினால்தான் பயங்கரவாதம் அழியும் .....இந்தியாவின் அனைத்து தீமைகளுக்கும் மூல முழுமுதல் காரணம் திருட்டு திமுகவும் அண்ணாதுரை கருணாநிதி சொரியானுமே .......அழிக்கவேண்டிய விஷ செடிகள் இவர்கள்

Advertisement