dinamalar telegram
Advertisement

முதலீட்டை அதிகரிக்க வேண்டும் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

Share
புதுடில்லி : கொரோனா பாதிப்புக்கு பின், நிலையான வளர்ச்சியை நாடு அடைய, உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு, தொழிலாளர் மற்றும் உற்பத்தி சந்தையில் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
ஏ.ஐ.எம்.ஏ., தேசிய மேலாண்மை மாநாட்டில் பங்கேற்று, அவர் மேலும் கூறியுள்ளதாவது:நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும்; வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுகாதாரம், கல்வி, டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும்.
கொரோனா தொற்று நோய், வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளை மிகவும் பாதித்துள்ளது.எதிர்காலத்தில் வாழும் சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதே, நம் முயற்சியாக இருக்க வேண்டும். தனியார் நுகர்வு மற்றும் தேவைகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • rajan - erode,இந்தியா

    வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லுகிறார் ஏற்கெனவே கடந்த ஏழு ஆண்டுகளாக மோடி வருடத்திற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருப்பது தெரியாமல் பேசுகிறாரே

  • அப்புசாமி -

    வளர்ச்சி சும்மா பிச்சிக்கிட்டு போகுதுன்னு போன மீட்டிங்ல பேசினீயளே, இப்போ எப்பிடி இருக்கு?

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    Good

Advertisement