dinamalar telegram
Advertisement

2024ல் சட்டசபைக்கும் தேர்தல்: பழனிசாமி ஆரூடம்

Share
Tamil News
ஓமலுார் :''வரும் 2024ல் ஒரே நாடு; ஒரே தேர்தல் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், பார்லிமென்ட் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம், ஓமலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கூட்டுறவு சங்க தலைவர்கள், கட்சி சார்ந்தவர்களாக தேர்வு செய்வது கிடையாது. சங்கத்தில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை. நகை தள்ளுபடி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை.
'தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என, ஸ்டாலின் பிரசாரத்தில் தெரிவித்தார். தற்போது, கூட்டுறவு வங்கியில் மட்டும் என தெரிவித்துள்ளனர். எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வரும் 2024ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், பார்லிமென்ட் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது.முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

ஊடகத்தினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், ஆளுங்கட்சிக்கு, 'ஜால்ரா' போடும்படி உள்ளது. எதிராக செய்தி வெளியிட பயப்படுகிறீர்கள். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாதமாகிவிட்டது. அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவது, அவதுாறு பரப்புவது மட்டும், தி.மு.க., கொள்கையாக செய்து வருகிறது. மக்களுக்கு நல்லது செய்ய ஸ்டாலின் அரசு முன்வரவில்லை. அ.தி.மு.க.,வுக்கு மடியில் கனம் இல்லை. வழியிலும் பயம் இல்லை. சேகர் ரெட்டி டைரி குறித்து எந்த நோட்டீசும் வரவில்லை.

செந்தில் பாலாஜி அ.தி.மு.க.,வில் இருந்தபோது, சட்டசபையில் ஸ்டாலின் குறித்து பேசியதும், அவர், செந்தில் பாலாஜி குறித்து பேசியதும் சபை குறிப்பில் உள்ளது. அவர் மீது வழக்கு உள்ளது. யாராவது, அதுகுறித்து கேட்கிறீர்களா? தி.மு.க., இப்படிப்பட்டவர்களை அமைச்சர்களாக
வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (19 + 28)

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  தற்போது தமிழக அரசியலைப்பற்றி வரும் செய்திகள் அவ்வளவு நன்றாக இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  தினமலரை தவிர மற்ற பத்திரிகைகளும் மற்றும் தமிழில் உள்ள எல்லா ஊடகங்களும் பைசாவுக்கு விலைபோய் விட்டன. துக்ளக்கும் விதிவிலக்காக நேர்மையாக உள்ளது. செய்திகள் போடுவதில் நேர்மை, நாணயம் எல்லாம் என்றோ போய் விட்டது. தற்போது வெளிநாட்டு பைசாவுக்கும், உள்நாட்டு அதிகாரத்துக்கும் எல்லோரும் அடிபணிந்து விட்டார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதற்கொண்டு மறைக்கப்படுகின்றன. நேர்மையாக நாட்டு நடப்புகள் வெளிவருவது இல்லை. சில செய்திகளை சமூக ஊடகங்களை வைத்தே தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு சராசரி மனிதனாக மனம் வருத்தப்படத்தான் முடிகிறதே தவிர வேறு என்ன செய்ய முடியும்.

 • Subash - Chennai,இந்தியா

  ஜெயா வூட்டலயே உன்னோட கைவேலைய காமிச்ச நீ தமிழகத்தை சுரண்டி எத்தனை லட்சம் கோடி குவிச்சிருப்பே.

 • Subash - Chennai,இந்தியா

  கொடநாடு விசாரணை தீவிரமாக இருக்கிறது. அடிப்பொடியை பிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இப்படி தினம் ஒரு பிதற்றலை வெளியிடுகிறது.

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  2024 வரைக்கும் தாங்காது சாமி அதுக்குள்ளே தமிழகத்தை பக்கிஸ்தானுக்கோ, தாலிபானிஸ்தானத்திற்க்கோ விலை போட்டு வித்துருவானுங்க இந்த வந்தேறி தெலுங்கு உலகமகா ஊழல் குடும்ப கட்சி நேற்றைக்கு ராஜபவன் செய்திகள் படி அடுத்த சிலவாரங்களிலேயே அதிரவைக்கும் விஷயங்கள் தமிழகத்தில் நடப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று தோன்றுகிறது. புதிதாக வந்த உளவுத்துறை கவர்னர் பதவியேற்ற ரெண்டே நாளில் டிஜிபியை சந்தித்து உடனேயே உள்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்க டெல்லிக்கு விரைகிறார் என்றால், எதோ ஒன்று வசமாக, பலமாக இந்த திருட்டு தீயமூக்கா சதிகார கும்பலுக்கு எதிராக மாட்டியுள்ளத போல தெரிகிறது உள்துறை அமைச்சரை நேரில் சந்திப்பது மற்றும் ஒரு மாநில கவர்னர் திடீரென்று ஜனாதிபதியை சந்திப்பதென்பது எந்த மாதிரி சூழ்நிலையில் நடக்கும் என்பதை உங்களின் யூகத்திற்க்கே விட்டு விடுகிறேன் என்னமோ நடக்குது மர்மமா இருக்குது எதுவும் புரியவில்லை என்பது தான் நிதர்சனம் வெகுவிரைவில் தமிழகத்தில் நல்ல நிகழ்வுகளை எதிர்பாருங்கள், உண்மையான தமிழக மக்களே. ஓசி பிரியாணி, எச்சில் சாராய கொத்தடிமை சமூக அநீதி டுமீளர் கும்பல்கள் ஒடுக்கப்படுவது காலத்தின் கட்டாயம்.

  • Subash - Chennai,இந்தியா

   நீ இப்போ அமெரிக்காவுலதானே இருக்கே? உனக்கு வேற விஷயம் எதுவும் இல்லையா?

  • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

   உன் ஓசி பிரியாணி அஜீரணத்தோடு இந்த பயமும் உன்னை கலக்குகிறதா தீயமூக்கா கொத்தடிமையே

Advertisement