dinamalar telegram
Advertisement

பயங்கரவாதிகளுக்கு போதை சப்ளை: ஆந்திர ஜோடி குறித்து விசாரணை

Share
Tamil News
சென்னை: தலிபான்களிடம் இருந்து, 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3,000 கிலோ போதை பொருளை கடத்திய வழக்கில், சென்னையில் கைது செய்யப்பட்ட ஆந்திர தம்பதிக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, தலிபான் பயங்கரவாதிகள் உதவியுடன், ஈரான் வழியாக குஜராத் துறைமுகத்திற்கு, சரக்கு கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் நடப்பதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

ரகசிய கண்காணிப்புஇதையடுத்து, சில தினங்களுக்கு முன், குஜராத் மாநிலம், முந்த்ரா துறைமுகத்தில், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் சேர்ந்து, ஈரானில் இருந்து வந்த கன்டெய்னர்களில் சோதனையிட்டனர். இதில், இரண்டு கன்டெய்னரில் முக பவுடர் பார்சல்களுடன், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,988 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.பார்சலில், விஜயவாடா சத்தியநாராயணபுரத்தில் உள்ள, 'ஆஷி டிரேடிங் கம்பெனி' பெயர் எழுதப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த கம்பெனியை சுற்றி ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். விசாரணையில், அந்த கம்பெனியை, மச்சாவரம் சுதாகர் மற்றும் இவரது மனைவி கோவிந்தராஜு துர்கா பூரண வைஷாலி ஆகியோர் நடத்தி வருவது தெரியவந்தது.தொடர் விசாரணையில், இவர்கள், சென்னை மாங்காடு அருகே, கொளப்பாக்கம், வ.உ.சி., தெருவில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில், முதல் மாடியில் வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, குஜராத் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை, 10 நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்து வருகின்றனர். சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி குறித்து, தமிழக போலீசார், மத்திய - மாநில போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

யார் இவர்கள்?இந்த தம்பதி குறித்து, போலீசார் கூறியதாவது: மச்சாவரம் சுதாகர், பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை, விஜயவாடாவில் முடித்துள்ளார். திருமணத்திற்கு பின், சென்னை, கொளப்பாக்கம், வ.உசி., தெருவில், 29 குடியிருப்புகள் கொண்ட, 'கோவர்த்தனகிரி' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், முதல் தளத்தில் ஏழு ஆண்டுகளாக வாடகைக்கு வசிக்கின்றனர்.இவர்களுக்கு, 10 வயது மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.சுதாகர், மிகவும் பிரபலமான சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து அனுபவம் பெற்றுள்ளார். இவர்கள், ஆந்திரா, உ.பி., என, பல மாநிலங்களில், பல்வேறு பெயர்களில் கம்பெனிகளை பதிவு செய்துள்ளனர். இந்த கம்பெனிகள் உண்மையிலேயே உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்

.'சுதாகர் ஆஷி சோலார் சிஸ்டம்' என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.சுதாகர், இதற்கு முன் சென்னை துறைமுகம் வழியாக, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டாரா; தமிழகம் உட்பட, தென் மாநிலங்களிலும் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா; இவர்களுக்கு போதை பொருள் 'சப்ளை' செய்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ரொம்ப நல்லவங்க...'சுதாகர், வைஷாலி பக்கத்து வீடுகளில் வசிப்போர் கூறியதாவது: சுதாகர், வைஷாலி ஆகியோர், போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் போல தெரியவில்லை. மிகவும் நல்லவர்கள் போல இருந்தனர். அவர்களின் வீட்டில், அதிகாலையிலேயே பூஜை செய்வர். அவர்களுக்கு பக்தி அதிகம். இவர்கள் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களா என, எங்களால் நம்பவே முடியவில்லை. ஆடம்பரமாக இல்லாமல் மிகவும் எளிமையாக வசித்தனர். அவர்கள் வீட்டில், இரவு முழுதும், 10க்கும் மேற்பட்ட போலீசார் விசாரித்து, மறுநாள் மதியம் 12:00 மணிக்கு அழைத்துச் சென்றனர். குழந்தைகள் மட்டும் இங்கேயே இருந்தனர். அவர்களை, வைஷாலியின் சகோதரர் அழைத்துச் சென்றார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • DVRR - Kolkata,இந்தியா

  வேடிக்கை என்னவென்றால் ரூ 21,000 கோடி வியாபாரம்??? ஆந்திர குடும்பம்??? இருப்பது சென்னையில் வாடகை வீட்டில்???இதன் உண்மை பின்புலம் என்ன என்று ஆராய்ந்தால் மைனாரிட்டி சம்பந்தம் ஒவைசி வரைக்கும் போனாலும் போகும்???வேடிக்கை என்னவென்றால் குஜராத் துறை முகம் ஆந்திர குடும்பம் சென்னையில் வசிக்கின்றனர் அம்மாடி கதையில் இன்னும் நிறைய ட்விஸ்ட் இருக்கும் விரைவில் எதிர்பாருங்கள் என்று சொல்வது போல இருக்கின்றது இந்த செய்தி.

 • DVRR - Kolkata,இந்தியா

  21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3,000 கிலோ போதை??நேற்று செய்தியில் ரூ 19,000 கோடி என்று இருந்தது இன்று ரூ 21,000 கோடி???

 • jayvee - chennai,இந்தியா

  நிச்சயமாக இவர்கள் எதாவது அமைதி மார்க்க வியாபாரியின் பினாமியாகத்தான் இருக்கக்கூடும்

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   இல்லை குஜராத் துறைமுக முதலாளி அதானியின் பினாமி என்று கூறப்படுகிறது ..... அணியின் இந்த துறைமுகம் மூலம் மேலும் பல சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நடைபெறுவதாக தகவல் .... இதுக்கு தான் தனியார் கையில் துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் கொடுக்காதே என்று சொல்றது ....தேசத்தின் பாதுகாப்பில் வீழ்ச்சி ...

  • Anand - chennai,இந்தியா

   திருட்டு திராவிஷத்திற்கு பினாமியாகவும் இருக்கலாம்......

  • Subash - Chennai,இந்தியா

   கொடநாடு கொண்டானுக்கு பினாமியோ?

 • SYED - muscat,ஓமன்

  எல்லாத்தையும் நம்பிட்டோம் , பாவம் இந்த தம்பதி பலியாடுகள்...22000 கோடி பிசினெஸ் பண்றவங்க வீடு பார்த்தாலே தெரியுது....பெரிய தலையை தப்பிக்கிறதுக்கு இந்த தம்பதி காவு வாங்கியாச்சு.....கொடுமை.....

  • Anand - chennai,இந்தியா

   அதானே மூர்க்கங்களின் ஒருங்கிணைப்பாளனை விட்டுவிட்டு இந்த தம்பதியை காவு வாங்கிட்டாங்க போல..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கவர்னர் வந்த நேரம் இது போல போதைப்பொருள் சிக்குகிறது.

  • Subash - Chennai,இந்தியா

   அதானி துறைமுகத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம். அதுவும் குஜராத்தில்....

  • Subash - Chennai,இந்தியா

   @காசி...பிடிபட்டது குஜராத்தில்...இதுபோல் இன்னும் எத்தனை பிடிபடாமல் போனதோ? இதுதான் நாட்டின் உளவுத்துறை, போதை தடுப்புத்துறை செயலாற்றும் லட்சணமோ?

Advertisement