dinamalar telegram
Advertisement

சித்துவுக்கு எதிராக வேட்பாளர் அமரீந்தர் சிங் சூளுரை

Share
Tamil News
சண்டிகர் :“ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். வரவிருக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தி அவரை தோற்கடிப்பேன்,” என, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்., தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பூசல் நிலவியது. காங்., மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக, அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அமரீந்தர் சிங் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:ராகுல், பிரியங்கா இருவருமே அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். சித்து ஒரு தேசவிரோதி, ஆபத்தானவர். அவரிடம் இருந்து நாட்டை காப்பாற்ற கடுமையாக போராடுவேன். அடுத்த ஆண்டு நடக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவரை தோற்கடிக்கச் செய்வேன். அது வரை என் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10 + 10)

  • Raj - Chennai,இந்தியா

    அமரீந்தர் சிங் முன்னாள் ராணுவ வீரர், என்றும் காங்கிரஸ்காரர். சித்து ஒரு கட்சி மாறி. காங்கிரஸ் தலைமை எப்படி அமரீந்தர் சிங்கை தனிப்பட்ட காரணங்களுக்காக அவமானப்படுத்துகிறது பாருங்கள்.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    திரு துருவேஷ் அவர்களுக்கு 2013 இல் அத்வானிக்கு வயது 86. 71 அல்ல. கொஞ்சம் புத்திசாலித்தனமாக comment போடவும்.

  • krishnamurthy - chennai,இந்தியா

    தெளிவான அரசியல்வாதி அம்ரிந்தர். நேர்மையானவர்.

  • jayvee - chennai,இந்தியா

    பாகிஸ்தானின் ISI ஆதவறவு பெற்ற சிந்துவை அசைப்பது கஷ்டம்.. ஏனென்றால் காங்கிரஸ் நிலைமையும் அதுதான்

    • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

      டேய் அவன் நேரமே உங்க பிஜேபி யில தானே இருந்தான் ... அப்போ வும் ISI ஆதரவுடன் தான் பிஜேபி யில இருந்தானா ..?

    • Anand - chennai,இந்தியா

      // அவன் நேரமே உங்க பிஜேபி யில தானே இருந்தான்// டேய் அவனோட குணம் தெரிந்து தான் பிஜேபி விரட்டி விட்டது, காங்கிரஸ் கட்சிக்கே உரித்தான அவனின் தேசவிரோதி குணம் ரொம்பவே பிடித்து போனதால் பஞ்சாபி மாநில காங்கிரஸ் தலைவனாக மகுடம் சூட்டப்பட்டுள்ளான்...

  • PANNADAI PANDIAN - wuxi,சீனா

    ஒரு கொலைகாரனை கட்சியில் சேர்த்தால் கட்சி நாசமாகாமல் பூத்து குலுங்குமா ??? சித்து எதிர்காலம் அரசியலில் கேள்வி குறி.

Advertisement