துருக்கி அரசு ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு துருக்கி அதிபர் தயிப் எர்டோகன், ஐ.நா., பொதுச் சபையில் வெளியிட்ட 'வீடியோ' அறிக்கையிலும், அவர் பாகிஸ்தானுக்கு பயணித்தபோது வெளியிட்ட அறிக்கையிலும், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பதிவு செய்திருந்தார். இதற்கு 'இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்' எனக்கூறி, மத்திய அரசு அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
ஆதரவு
இந்நிலையில், ஐ.நா., பொதுச் சபை மாநாட்டில், நேற்று முன்தினம் உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன், மீண்டும், காஷ்மீர் விவகாரத்தை குறிப்பிட்டு பேசி உள்ளார். அதன் விபரம்:கடந்த, 74 ஆண்டுகளாக, காஷ்மீரில் நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில், துருக்கி அரசு உறுதியாக இருக்கிறது.
ஐ.நா., தீர்மானங்களின் வரம்பிற்கு உட்பட்டு, சம்மந்தப்பட்ட இரு தரப்பினரும் அமர்ந்து பேசி, தீர்வு காண வேண்டும்.சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உய்கர் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வங்க தேசம் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில், மிகவும் சவாலான சூழல்களில் வசித்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், பாதுகாப்பாகவும், கண்ணியத்துடன் நாடு திரும்ப வேண்டும். அவர்களுக்கு, துருக்கி அரசு என்றும் ஆதரவாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
ஒன்னு செய்யி தய்யிபு.. கஷ்மீர் மாதிரியே, துருக்கிய பாரத்ததோடு இணைச்சிட்டு பதவிய விட்டுட்டு அப்புடியே ஓடிபூடு, ஆவாத வேல ஏன் பாக்குற?