dinamalar telegram
Advertisement

ஆபாச படம் வெளியிடுவதாக மிரட்டல்: கடிதத்தில் துறவி நரேந்திர கிரி தகவல்

Share
Tamil News
லக்னோ:'பெண்களுடன் ஆபாசமாக இருப்பதாக திரிக்கப்பட்ட போலி படங்களை வெளியிடுவதாக மிரட்டினர்' என, துறவியர் அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி, மரணத்துக்கு முன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய சீடர்கள்உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தின் தலைவரான நரேந்திர கிரியின் உடல், அவரது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்டது.

அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற துறவியர் அமைப்பின் தலைவராகவும் உள்ள அவர், தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருடைய உடல் அருகே அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் கிடைத்துள்ளது.தன் மறைவுக்குப் பின், மடத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை அதில் அவர் கூறியுள்ளார்.இதைத் தவிர, பெண்களுடன் ஆபாசமாக இருப்பதாக திரிக்கப்பட்ட போலி படங்களை வெளியிடுவதாக மிரட்டப்பட்டதாகவும், அவமானப்படுவதைவிட மரணமே மேல் என முடிவெடுத்து உள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தன் முக்கிய சீடர்களான ஆனந்த் கிரி, ஆத்ய திவாரி, சந்தீப் திவாரி ஆகியோரின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைஅடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பிரேத பரிசோதனைஇதற்கிடையே, மறைந்த நரேந்திர கிரியின் உடலை, ஐந்து டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்து, அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை, உயர் போலீஸ் அதிகாரியிடம் 'சீல்' வைக்கப்பட்ட உறையில் கொடுக்கப்பட்டு உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா

  ஆசையே அனைத்துக்கும் காரணம் அதுவும் ருசி கண்ட ஆசை பாவம்

 • R MANIVANNAN - chennai,இந்தியா

  துறவிகளுக்கு எதற்கு பணம் ?

  • jagan - Chennai,இலங்கை

   மடத்திற்கு வரும் காணிக்கை. துறவியின் சொந்த பணம் இல்லை.

 • Sivagiri - chennai,இந்தியா

  சர்வதேச மதம் மாற்றும் சக்திகளின் பின்னணி இருக்கலாம் . .

 • jayvee - chennai,இந்தியா

  சிஷ்யப்பிள்ளையை பார்த்தாலே ஒரு மாதிர்யாதான் இருக்கான்.. ட்ரிம் பண்ண தாடியும் அவன் ஸ்டைலும் பாலிவுட் வில்லனாயிருப்பானோன்னு தோணுது

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   குருவிடம் தவறு இல்லை என்றால் எதற்க்காக தூக்கில் தொங்க வேண்டும் ... சட்டரீதியாக எதிர்த்து போராட வேண்டியது தானே ... பிரதமர் துவங்கி முதலமைச்சர் வரை குருவின் நட்பு வளையத்தில் உள்ளவர்கள் ... பின்னர் எதற்க்காக தூக்கில் தொங்க வேண்டும் .... சீக்கிரம் அந்த வீடியோ வை வெளியே விடுங்கள் ...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எக்காலமும் இந்துத்துறவிகள் என்றால் பலர் இது போல பணம் கறக்க முயல்வது வாடிக்கை.

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   ஆனால் துறவிகள் பெண்களுடன் இருப்பது குற்றம் அல்ல போல ......

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

   சன்டீவி அப்படித்தான்

  • jagan - Chennai,இலங்கை

   "ஆனால் துறவிகள் பெண்களுடன் இருப்பது குற்றம் அல்ல போல ." - பாஸ்டருங்களுக்கு இது தான் வேலை ஆனா எல்லாருக்கும் இல்லை

  • Venkata Krishnan - Toronto ,கனடா

   பாஸ்டர் பண்ணினா அது பாவமன்னிப்பு,இந்துத்துறவிகள் பண்ணா அது மன்னிக்கமுடியாத கொடிய குற்றம்னுதான் பிபி சொல்றாரு.

Advertisement