dinamalar telegram
Advertisement

என் பயணம் கூட்டமைப்பை வலுப்படுத்தும்: அமெரிக்கா புறப்படும் முன் பிரதமர் டுவிட்

Share
Tamil News
புதுடில்லி:பிரதமர் மோடி, நான்கு நாள் பயணமாக, அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, ''என் பயணம், அமெரிக்காவுடனான விரிவான கூட்டமைப்பை வலுப்படுத்த உதவும்,'' என, 'டுவிட்டரில்' மோடி பதிவிட்டுள்ளார்.

இந்தோ -- பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன.

பல்வேறு நிகழ்ச்சிகள்இந்த அமைப்பின் மாநாடு, அமெரிக்காவில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க,பிரதமர் மோடி டில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அமெரிக்காவில் 25ம் தேதி வரை தங்கியிருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களை இன்று சந்திக்கிறார். பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும், மோடி சந்தித்து பேச உள்ளார்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில், நாளை நடைபெறும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், முதன் முறையாக இம்மாநாட்டில் அனைத்து தலைவர்களும் நேரில் சந்திக்க உள்ளனர்.

ஆர்வமாக உள்ளேன்மாநாட்டின் ஒரு பகுதி யாக ஜோ பைடனை மோடி தனியாகவும் சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து, நாளை மாலை நியூயார்க் செல்லும் மோடி, 25ம் தேதி ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பேசுகிறார்.அமெரிக்கா புறப்படுவதற்கு முன், டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:

அதிபர் பைடன் அழைப்பை ஏற்று, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் அமெரிக்கா செல்கிறேன். என் பயணம், அமெரிக்காவுடனான விரிவான கூட்டமைப்பை வலுப்படுத்த உதவும். சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், இந்தியா அமெரிக்கா இடையே ஒத்துழைப்பிற்கான திட்டங்களை ஆராயவும், துணை அதிபர் கமலா ஹாரிசை சந்திப்பதில் ஆர்வமாகவும் உள்ளேன்.

அதிபர் பைடன், ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகாவுடன் இணைந்து குவாட் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளேன். மார்ச் மாதம் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பலன்களை ஆராய உள்ளோம். சர்வதேச பிரச்னைகளை மையப்படுத்தி, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பேசுவேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்

  மில்லியன் டாலர் கஸ்டமர் ஆச்சே ,சும்மாவா ஹா ஹா ஹா

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  இந்தோ பசிபிக் பிராந்தி.......வானம் ஏறி வைகுண்டம் போய் கோழி பிடிக்க போறாங்க......பக்கத்து நாட்டோட நல்லுறவை வளர்க்க சரியான அமைச்சர் தேவை....அமெரிக்கா அல்ல

 • R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா

  வைரஸ் தொற்று பரவும் காலம், அமெரிக்க தலைமை தகுதியானதோ தகுதியற்றதோ இந்திய நாட்டுப் பிரதமாரான நரேந்திர மோடி இந்தியாவிலேயே அதிகமுறை வெளிநாட்டுப்பயணம் செய்த பிரதமராக இருக்கிறார் இதுவரை வெளிநாடுகள் சென்று எந்தமாதிரியான கூட்டமைப்பு கட்டமைப்பினால் இந்தியாவிற்கு நல்லது நடந்தது என்று தெரியவில்லை.

 • jayvee - chennai,இந்தியா

  எது எப்படியோ.. எதிர்க்கட்சிகளுக்கு அவர்களிடம் கூலி வாங்கிக்கொண்டு செயல்படும் சில பல மீடியா ஊடகங்களுக்கும் இனி அதுதான் ஒரு மாதம் கன்டென்ட் கிடைத்துவிட்டது

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வலுவிழந்த கம்முநிச மனோபாவத்துடன் செயல்படும் அமெரிக்க ஜனநாயக அரசு இதற்கு தலைமை தாங்க தகுதியற்றது. தவிரவும் சீனாவில் அதிக முதலீடு செய்துள்ள அமெரிக்காவால் சீனாவை எதிர்க்க முடியாது.

Advertisement