dinamalar telegram
Advertisement

சாதி வாரி கணக்கெடுப்பால் இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை தாண்டும்: லாலு நம்பிக்கை

Share
பாட்னா: சாதி வாரி கணக்கெடுப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யின் மக்கள் தொகை பாதிக்கும் மேல் இருந்தால் இட ஒதுக்கீட்டில் உள்ள 50 சதவிகித உச்சவரம்பை தகர்க்க முடியும் என்றார்.

2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம் முழுமையான சமூகநீதியை உறுதி செய்ய முடியும் என்பது அவரது வாதம். அதே போல் பீகாரில் இக்கோரிக்கைக்காக முதல்வர் நிதிஷ் குமாரும், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் ஒன்றிணைந்து உள்ளனர். சமீபத்தில் இருவரும் இணைந்து அனைத்து கட்சிக் குழுவுடன் பிரதமரை சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினரை தவிர இதர சாதிகளின் பற்றி கணக்கெடுப்பு நடத்துவதில்லை என கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது கட்சித் தொண்டர்களுடன் அரை மணி நேரம் காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பில் ஓ.பி.சி., பிரிவினரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது பற்றி அவர் பேசியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பை முதலில் நான் தான் எழுப்பினேன். இது தொடர்பாக பாராளுமன்றத்திலேயே கோரிக்கை வைத்தேன். எஸ்.சி., எஸ்.டி., உட்பட அனைத்து தரப்பினரின் நலனுக்கானது எனது கோரிக்கை. சுதந்திரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீடு உள்ளது. அந்த இடஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை. இதன் விளைவாக பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. புதிய சாதிவாரி கணக்கீடு மூலம் அனைவருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கிடைக்கும். அதன் மூலம் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவிகித உச்சவரம்பைக் கூட தகர்க்க முடியும். என பேசினார்.

1992-ல் மண்டல் குழு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டினை தாண்டக் கூடாது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

 • jayvee - chennai,இந்தியா

  பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால். எல்லோருக்கும் புண்ணாக்குதான்

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஜாமீன் கைதி, சமூகநீதி காவலர் பட்னா ராமதாஸ் ஜாலியா இருக்காரு .

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  பீகார் மூதறிஞர் சிறைக்குள் இருக்கும்போது உயிருக்கு போராடுவது போல் மருத்துவ உலகத்தைக் கையில் வைத்துக்கொண்டு நாடகம் இப்போது தெளிவான பேச்சு, ஒருபுறம் புற்றுநோய் இரவோடு இரவாக குடும்பத்தோடு அமெரிக்கா பயணம், தேர்தல் என்று வந்தால் உடல் நன்றாகிறது, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  ஜாதிப்பெயரை எந்த விண்ணப்பத்தில் கேட்கக்கூடாது ..சர்நேம் எழுதுவதை தடை செய்தாலே நல்லது ..இப்போ பெரும்பாலான வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் மட்டுமே ..கிரிக்கட்டிலும் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்காம இருக்காங்களே ..இந்த தலைவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செல்லும்போது மருத்துவரின் ஜாதி பார்ப்பதில்லை

 • என்னுயிர்தமிழகமே - Hyderabad,இந்தியா

  உருளை கிழங்கு எந்த சாதியில் வரும் ? ஓஹோ அதற்கும் கல்லூரி முதல் வேலை வாய்ப்பு வரை இலவசம் கொடுத்து அதனையும் தாலிபன் போன்ற முன்கலதினருக்கு கருஞ்சட்டைத் குர்தா போட்டு தொண்டு செய்ய சொல்லலாம்

Advertisement