dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Share
Tamil News
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ்: தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் படிக்க மற்றும் ஆங்கிலத்தில் பேச சிரமப்படுவதாக தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.


'டவுட்' தனபாலு: இந்த உண்மையை சற்று தாமதமாக அறிந்து கொண்டீர்களோ அல்லது ஏற்கனவே அறிந்ததை தாமதமாக வெளிப்படுத்துகிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. ஏனெனில், உலகளாவிய நிலையில் நாடுகள் உள்ளன. தமிழ் மொழி உன்னத மொழி தான்; அதில் எவ்வித, 'டவுட்'டும், யாருக்கும் கிடையாது. எனினும், அதை மட்டுமே படித்தால், உலக அளவில் நாம் போட்டி போட முடியாது. எனவே, ஆங்கிலம் மட்டுமின்றி பல மொழிகளையும் நம் மாணவர்கள் கற்க வேண்டும்; வீட்டில், வெளியில் சுத்தமான தமிழில் பேச வேண்டும்!


தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி:
பொறியியல் கல்லுாரிகளில் சேரும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதோடு, மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இந்த அறிவிப்பு, அனைவருக்கும் கல்வி என்ற திராவிடச் சிந்தனையை மேலும் வலுப்படுத்தும்.



'டவுட்' தனபாலு: முதல்வர் ஸ்டாலினுக்கு பிடித்த வார்த்தை, 'திராவிடம்' என்பதால், உங்கள் அறிக்கையை முடிக்கும் இடத்தில், கஷ்டப்பட்டு திராவிடம் என்ற வார்த்தையை சேர்த்துள்ளீர்களோ என்ற, 'டவுட்' எழுகிறது. சரி, அனைவருக்கும் கல்வி என்பது மத்திய - மாநில மற்றும் எல்லா தரப்பினரின் விருப்பம் அல்லவா... அதை ஏன் திராவிடத்திற்குள் பூட்டுகிறீர்கள்?


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
: 'கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது' என, பஞ்சாயத்து தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களை போராடித் தான் பெற வேண்டி இருப்பதன் அடையாளம் இது.


'டவுட்' தனபாலு: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், அதற்கு கட்சியினரைத் தயார்படுத்தும் விதமாக, பஞ்சாயத்து விவகாரத்தை பிடித்து, அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல குரல் கொடுத்துள்ளீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. ஏனெனில், இத்தனை நாட்களும் இதுபோன்ற விவகாரங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்ததில்லையே!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement