dinamalar telegram
Advertisement

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனுத்தாக்கல் நிறைவு

Share
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்.,22) மாலை நிறைவடைந்தது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் 27,003 இடங்களுக்கான இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த செப்.,15ல் துவங்கியது. இன்று (செப்.,22) மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. நேற்று வரை உள்ளாட்சி பதவிகளுக்கு 64,299 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
கடைசி நாளான இன்று பலரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதனால், மொத்தமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாளை (செப்.,23) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளதாகவும், வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 25 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Narayanan - chennai,இந்தியா

    அனைத்து இந்து மக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . திமுகவையும் அதன் கூட்டணியையும் தோற்கடிக்க வேண்டும் . செய்வீர்களா ? செய்வீர்களா ?

Advertisement