dinamalar telegram
Advertisement

சாமியார்பேட்டை கடற்கரையில் துாய்மைப்படுத்தும் பணி

Share
Tamil News
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கிராமத்தில், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்தியஅரசின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் இணைந்து, சர்வதேச கடலோர துாய்மை தினத்தை முன்னிட்டு, கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி வேல்விழி தலைமை தாங்கி, திடக்கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.


திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் வரவேற்றார். துாய்மை பணியை, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் அனந்தராமன் துவக்கி வைத்தார்.சாமியார்பேட்டை கடற்கரையில், 500 மீ.,நீளமும், 100 மீ., அகல பரப்பில், துாய்மை பணி நடந்தது. 300 கிலோ குப்பை சேகரித்தனர். கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் சங்கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement