dinamalar telegram
Advertisement

சித்தேரியில் மீண்டும் கழிவு நீர் கலப்பு கோடிக்கணக்கில் வரிப்பணம் வீணடிப்பு

Share
Tamil News
சென்னை : கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட புழுதிவாக்கம் சித்தேரியில், மழை நீர் வடிகால் வாயிலாக கழிவு நீர் கலப்பது அதிகரித்துள்ளது.


ஏரியை சுற்றி உள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கியுள்ளது. பெருங்குடி மண்டலம், 169வது வார்டில் அமைந்துள்ளது, புழுதிவாக்கம் சித்தேரி. ஆக்கிரமிப்பு போக, தற்போது, 27 ஏக்கர் பரப்பளவுடன் காணப்படுகிறது.ஆக்கிரமிப்புபரங்கிமலை ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, பல ஆண்டுகளாக, ஏரி பராமரிக்கப்படாமல் இருந்தது. ஏரியின் ஒருபக்கக்கரை உடைத்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.அப்பகுதியில், பாதாள சாக்கடை இணைப்பு இல்லாததால், மழை நீர் வடிகால் வாயிலாக இந்த ஏரியில் கழிவு நீர் கலக்கப்பட்டு வந்தது.வீடுகளின் குப்பையும், ஏரியில் கொட்டப்பட்டு வந்தன. இதனால், புழுதிவாக்கம் ஏரி மாசடைந்து, துர்நாற்றம் வீசியது.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் நடவடிக்கையாக, மாநகராட்சி கட்டுப்பாட்டிற்கு வந்த புழுதிவாக்கம் சித்தேரிக்கு, விமோசனம் பிறந்தது.ஏரியில் இருந்து குப்பை அகற்றப்பட்டு, கழிவு நீர், செல்வது தடுக்கப்பட்டது. மேலும், 2.44 கோடி ரூபாயில், நடைபாதையுடன் இந்த ஏரி புனரமைக்கப்பட்டது. இது, அப்பகுதி நலச்சங்கத்தினரிடையே வரவேற்பை பெற்றது.


இந்நிலையில், தற்போது மீண்டும் வடிகால் வாயிலாக, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் விடப்படுகிறது. மேலும், ஏரியை சுற்றியுள்ள அரசு நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டு, மதில் சுவர் எழுப்பப்படுகிறது. அகற்றம்இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கபட்ட ஏரி, தற்போது, போதிய பராமரிப்பு இல்லாததால், சுற்றிலும் புதர் மண்டி காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் 'குடி'மகன்களின், திறந்தவெளி உல்லாச விடுதியாகவும் மாறியுள்ளது.ஏரியை சுற்றி, மின் விளக்கு இன்றளவில் பொருத்தாததால், சமூக விரோத செயல்கள் அரங்கேற ஏதுவாக உள்ளது. ஏரிக்கு மழை நீர் வடிகாலில் இருந்து, அருவிபோல பாயும் கழிவு நீரை, மாநகராட்சி உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

வீடுகளில் இருந்து மழை நீர் வடிகாலுக்கு கொடுக்கப்பட்டுள்ள கழிநீர் இணைப்பு குழாய்களை கண்டறிந்து அகற்ற வேண்டும்.ஏரிக்குள் கழிவு நீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிக்கரையை சுற்றி உள்ள அரசு நிலம் எது என உடனடியாக அடையாளம் கண்டு, அதில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அங்கிருக்கும் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்ற வேண்டும்.அந்த இடங்களை மீண்டும் ஆக்கிரமிக்காத படி, ஏரிக்கு நடைபயிற்சி செய்ய வருபவர்கள் ஓய்வு வெடுக்கவும், பார்வையாளர் மாடம், உடற்பயிற்சி மையம், நுாலகம் ஆகியவை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement