dinamalar telegram
Advertisement

ராகுல் காலில் விழுந்தாரா பஞ்சாப் புதிய முதல்வர்?

Share
சண்டிகர் :பஞ்சாபின் புதிய முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங் சன்னி, 58, காங்., முன்னாள் தலைவர் ராகுலின், 51, காலைத் தொட்டு ஆசி கேட்டதாக 'வீடியோ' வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் காங்., கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி மோதலில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.சண்டிகரில் நேற்று முன்தினம் அவர் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.


முதல்வராக பதவியேற்ற சன்னி, ராகுலின் காலைத் தொட்டு ஆசி கேட்டதாக 'வீடியோ' ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது; இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.'இதுதான் காங்.,கின் கலாசாரம்' என, எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, பா.ஜ., விமர்சனம் செய்து உள்ளன.


சிம்லாவில் ஓய்வு!


காங்., தற்காலிக தலைவர் சோனியாவின் மகளும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்காவுக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் பங்களா உள்ளது. அங்கு சோனியா, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோர் ஓய்வு எடுத்து வருகின்றனர்.
சரண்ஜித் சிங் சன்னியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் திட்டம் ஏதும் ராகுலுக்கு இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அந்த விழாவில் பங்கேற்றார். காலையில் சண்டிகருக்கு விமானம் மூலம் வந்த சோனியா, காரில் சாலை மார்க்கமாக சிம்லாவுக்கு சென்றார். பதவியேற்பு விழா முடிந்ததும் ராகுலும் சிம்லாவுக்கு புறப்பட்டு சென்றார்.அடுத்த சில நாட்கள் அவர்கள் அங்கு தங்கி, ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.- புதுடில்லி நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

 • sundarsvpr - chennai,இந்தியா

  காலை தொட்டு வணங்குவது என்பது ஒரு புதிய கலாச்சாரம். அஞ்சலி அல்லது காலின் கீழ் விழுந்து வணங்குவது (தொடுவது அல்ல) பொதுவாய் எல்லோரும் செய்வது. கொரானா வந்த பிறகு கைகொடுத்தல் தழுவுதல் போன்ற கலாச்சாரங்கள் அறவே இல்லை. பெற்றோர் ஆசிரியர் உறவின பெரியோர்களை வணங்குதல் மரபு. இது குறைந்தது உறவின் நெருக்கும் நெருக்கமும் கேள்விக்குறியாய்விட்டது. தகுதியற்றவர்கள் வணக்கத்தை ஏற்பது ஒரு ஆணவம்தான்.

 • Ganesan Madurai -

  Please don't repeat the same comment

 • duruvasar - indraprastham,இந்தியா

  இந்த பாலியல் குற்றம் சாட்டப்பட்ட எளிய மனிதர் பயங்கர சுயமரியாதை பஞ்சாப் தமிழனாக இருப்பார் போல் தெரிகிறது. எனக்கு புகழ்ச்சி புடிக்காது என உடனடியாக ராகுல் அறிவிப்பு வெளியிடவேண்டும்.

 • ஆரூர் ரங் -

  சட்டசபையில் சீனியர் திமுக மந்திரிகள் எம்எல்ஏ க்கள் உதை அண்ணாவைப் பார்த்து 🙏🙏கும்பிடுறேன் சாமின்னு கூழைக்கும்பிடு போட்டது நினைவுகூறத்தக்கது. அரசியல்😇 வயிற்றுப் பிழைப்புக்கு என்றானபின் இது சகஜம்தான்

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  சிறியவரின் காலில் விழுந்து ஆசி பெறுவது தான் மத சார்பின்மை மற்றும் சமூக நீதியும் கூட .....அதை அற்புதமாக சுய மரியாதைக்கு பங்கம் வராமல் வெளிப்படுத்திய முதல்வர் பாராட்டுக்குரியவர் ....

Advertisement