dinamalar telegram
Advertisement

இன்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

Share
புதுடில்லி : 'குவாட்' மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (செப்.22) அமெரிக்கா செல்கிறார்.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன.இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் 24ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி இன்று டில்லியில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார்; 23ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.

பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.
இதைத் தொடர்ந்து, 24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் மோடி உரையாற்ற உள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், முதன் முறையாக இம்மாநாட்டில் அனைத்து தலைவர்களும் நேரில் சந்திக்க உள்ளனர்.இது தவிர ஜோ பைடனை மோடி தனியாகவும் சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து 24ம் தேதி மாலை, மோடி நியூயார்க் செல்கிறார். அங்கு, 25ம் தேதி ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

 • Sandru - Chennai,இந்தியா

  அப்பாடான்னு பெரு மூச்சு விடுவார். ரெம்ப நாளைக்கு பிறகு அதுவும் விலை உயர்ந்த புது விமானத்தில் பயணம் செய்ய போகிறார்.

  • Visu Iyer - chennai,இந்தியா

   வயதான காலத்தில் எதுக்கு சார் எங்க அன்புக்குரிய பிரதமரை அலைய விடுகிறீர்கள்.

 • Vittalanand -

  பீடன் ஒல்லியாக இருக்கிறார். அவரால் மோடியின் " கட்டிபிடி " தாங்க முடியுமா ?

  • ramesh - dubai

   கட்டி பிடிச்ச அடுத்த எலெக்ஷன்ல அவுட் என்ன நம்ம தலையின் ராசி அப்படி

  • Visu Iyer - chennai

   கொரநா இருக்கும் போது கட்டவும் முடியாது பிடிக்கவும் முடியாது.. என்று சொல்ல வருகிறீர்களா. அல்லது இல்லாத கொரானாவுக்கு எதுக்கு சார் குடை பிடிக்கிறீங்க என்று சொல்றீங்களா.

 • ருத்ரா -

  நம் பிரதமர் நம் இந்திய பெருமை வாழ்த்துக்கள் ஜி

  • Visu Iyer - chennai

   நம் பிரதமர் நம் இந்திய பெருமை வாழ்த்துக்கள் ஜி///புரிகிறது.. எழுபது வயது நிரம்பியவர்கள் அரசு உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள்.. என்ன செய்ய.. பொறுமையாக இருங்கள்.. அறிவும் திறமையும், அரசியல் முதிர்ச்சியும், மக்கள் நலனில் அக்கறையும், தேச நலனில் உண்மையான பற்றும், வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் அடிப்படை அறிவும் பெற்ற பிரதமர் விரைவில் வருவார்.. அப்போ இந்தியா ஒளிரும் மக்கள் வாழ்வு மலரும்.

 • அப்புசாமி -

  அப்கே பார் பைடன் சர்க்கார்னு மறக்காம முழங்கிட்டு வாங்க.... ட்ரம்பையும் நலம் விசாரியுங்க...

  • Visu Iyer - chennai

   அப்கே பார் பைடன் சர்க்கார்னு மறக்காம முழங்கிட்டு வாங்க.... ட்ரம்பையும் நலம் விசாரியுங்க...///சரி.. அதுக்கு ஒரு வரியை இந்திய மக்கள் மீது போட்டால் போச்சு.. அதுக்கு ஒரு செஸ் வரி என்று பெயர் வைத்து விடலாம் என்ன சரியா.. உங்கள் சம்பளம் எவ்வளவு..?

 • S. Bharani - singapore,சிங்கப்பூர்

  வாழ்த்துக்கள்.... விமர்சனங்களை ஒதுக்குவோம்... நாட்டு நலன் கருதி இப்பயணம் அவசியம்

  • Visu Iyer - chennai,இந்தியா

   இணைய வழியாக ஒரு மாநாட்டை நடத்த முடியும் என்கிற போது இது அவசியமா என்று நீங்கள் இரண்டு வார்த்தைக்கு நடுவே வைத்த புள்ளிகள் சொல்வதை புரிந்து கொள்ள முடிகிறது.. என்ன செய்ய.. பொறுமையாக இருங்கள்.. அறிவும் திறமையும், மக்கள் நலனில் அக்கறையும்ம், தேச நலனில் உண்மையான பற்றும் அரசியல் முதிர்ச்சியும், வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் அடிப்படை அறிவும் உள்ள பிரதமர் விரைவில் வருவார். அப்போ இந்தியா ஒளிரும். மக்கள் வாழ்வு மலரும்.

Advertisement