dinamalar telegram
Advertisement

கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டத்தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

Share
புதுடில்லி: கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட உயர்நீதிமன்றம் அளித்திருந்த அனுமதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் பகுதியில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட தடை விதிக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மேலும் அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக கூறி, அவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

பொதுநல நோக்கம் என்பதால் கோயில் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து ரங்கராஜன் நரசிம்மன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.அப்துல்நசீர் மற்றும் கிருஷ்முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (23)

 • Sri - Ghisin,கோஸ்டாரிகா

  பொது நலம் என்றால் நாட்டு நலன் அதானி துறைமுகம் ஸ்டெர்லைட் நியூட்ரினொ.. மற்றும் ஏண்ணற்ற அந்நிய செலவாணி ஈட்டும் திட்டங்கள் கோர்ட் தமிழக அரசு முட்டுக்கட்டை பட்டுள்ளது..ஏன் இந்து கோவில் நிலங்கள் இப்படி கபளீகரம் செய்யப்படுகிறது..லயலொ கல்லுரி சிவன் கோவிலுக்கு திருப்பி கொடுக்க வேண்டூம்

 • Venkat Sadagopan -

  அன்பே உருவான எம் கடவுள் எட்டி உதைத்தாலும் பொருத்துக் கொள்வார். அதனால் ஏமாளி ஆவாரோ?

 • duruvasar - indraprastham,இந்தியா

  இவனுங்க கோவில் நிலம் இருக்கிற இடத்திலெல்லாம் ஒரு மாவட்டத்தை துவங்குவாங்களாட்டம் இருக்கு. பேசாம பிராண்ட் பேண்ட் கம்பெனிகள் போல் தெருக்களில் குடையை விரித்து விரித்து அலுவலகம் வச்சிக்கலாம்.

 • ஆரூர் ரங் -

  கோவில் நிலத்தை யாரோ ஆட்டையை போடுவதற்கு பதில் அரசே குத்தகைக்கு எடுத்துக் கொண்டு நியாயமான👌 பணத்தை குறிபிட்ட காலத்தில் கொடுப்பது மேல். தனியாரிடம் குத்தகை வசூல் மிகக் கடினம். ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் கோவில் நிலத்தை ராஜிவ் நினைவிடம் கட்ட அடிமாட்டு விலைக்கு விற்றதும், அதனை எதிர்த்த ஜீயர் மிரட்டப் பட்டதும் நினைவுக்கு வருகிறது. கோவிலின் புனித நிலத்தை சுடுகாடாக ஆக்க எப்படி மனம் வந்ததோ?

 • Bala - chennai,இந்தியா

  தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்று கூப்பாடு போட்டவர்கள் கோயில் நிலங்களே இப்படி அரசால் ஆக்ரமிப்பு செய்யப்படுவதை எதிர்த்து அதுவும் ஒரு சைவக்கோவில் நில ஆக்கிரமிப்பை தடுக்க ஒரு வைணவர் உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டியிருக்கிறது. சைவ மடாதிபதிகள் அரசுக்கு எடுத்துரைத்திருக்கலாம் அல்லவா? சுகி சிவம் போன்ற சைவ சமயத்தை சார்ந்த சொற்பொழிவாளர்களாவது இதை பற்றி பொதுவெளியில் பேசியிருக்கலாம் அல்லவா? மிக்க மன வேதனை அடைகிறோம்

Advertisement