dinamalar telegram
Advertisement

செல்ல நாய்க்குட்டிக்கு ரூ.2.5 லட்சம் விமான கட்டணம் செலுத்திய பெண்

Share
Tamil News
சென்னை:மும்பையில் இருந்து சென்னைக்கு, தன் செல்ல நாய்க்குட்டியுடன் பயணித்த பெண், அதற்கு விமான கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
மும்பையிலிருந்து சென்னை வந்த, 'ஏர் இந்தியா' விமானத்தில், பெண் ஒருவர், 'மால் டீஸ்' என்ற, உயர் ரக நாய்க் குட்டியை எடுத்து வந்திருந்தார். விமானங்களில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்யலாம்.
ஆனால், அந்த பிராணிக்கும் விமான டிக்கெட் எடுக்க வேண்டும். மேலும், அந்த பிராணிக்கு நோய் தொற்று ஏதும் இல்லை என்ற சான்றிதழ், நோய் எதிர்ப்பு தடுப்பூசி போட்ட சான்றிதழ் வேண்டும்.குறிப்பிட்ட எடைக்கு குறைவாக, அந்த பிராணி இருந்தால், பயணி தன்னுடன் இருக்கையில் வைத்துக் கொள்ளலாம்.
இல்லையெனில், விமானத்திற்குள் உள்ள கூண்டு அறைக்குள் வைக்க வேண்டும்.
அதற்கு ஆக்ஸிஜன் செலுத்தும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இந்த பெண் கொண்டு வந்த நாய், குறிப்பிட்ட எடைக்கு மேல் இருந்தது. அதனால், அதை கூண்டில் வைக்குமாறு விமான ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
அந்த பெண்ணோ மறுப்பு தெரிவித்து, தன் இருக்கையில் தான் வைத்திருப்பேன் என்று அடம்பிடித்துள்ளார்.விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டில், அந்த பெண் பயணம் செய்ய இருந்தார்.
அந்த பெண் மற்றும் நாய்க்கான இரண்டு டிக்கெட் தவிர, இதர, 10 இருக்கைகள் காலியாக இருந்தன. இதையடுத்து, அந்த இருக்கைகளுக்கான கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாயை, தானே செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
அதை ஏற்ற ஏர் இந்தியா அதிகாரிகள், பெண்ணுடன் நாய் பயணிக்க சம்மதித்தனர்.
ஆக., ௧௫ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, இப்போது தகவல் வெளியிட்டுளள, ஏர் இந்தியா அதிகாரிகள், அந்த பெண் பயணி பற்றிய விபரங்களை வெளியிட மறுத்து விட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home செல்லப்பிராணியுடன் விமான பயணம்; ரூ.2 லட்சம் செலவு செய்த பெண் (19)

  • Krishnan - Coimbatore ,இந்தியா

    சிம்பிளாக சொன்னால் பண திமிரு தான்.

  • S Bala - London,யுனைடெட் கிங்டம்

    இதுமாதிரி திமிர் பிடித்தவர்களின் வருமான வரி கணக்கை தணிக்கை செய்ய வேண்டும்

  • Rajesh Kumar -

    0...........

  • theruvasagan -

    இதுல நெகிழ வைக்க என்ன இருக்கிறது. இது ஒரு வகையில் அநியாயம். தனது செல்லப் பிராணிக்காக தனக்குள்ள பணவசதியை பயன்படுத்தி பத்து சீட்டுகளை வாங்கியதன் மூலம் அவசர அலுவல்களுக்காக செல்லும் மற்வர்களுக்கு இடம் கிடைக்காமல் பண்ணினது பொறுப்பான செயலா.

  • jay - toronto,கனடா

    பொதுவா இவர்களுக்குப் பிள்ளைகள் ஆதரவில்லை

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    More money.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    கோடிக்கணக்கில் பணம் இருக்குது.

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    ஸ்டாலின் குருமாவுடன் பயணித்தால் கூடுதல் கட்டணம் செலுத்தணுமா?....

  • ஆரூர் ரங் -

    எத்தனை ஏழைகள் ஒரு வேளை உணவுக்கு அலையும் காலத்தில் ஒரு அன்னிய இறக்குமதி நாய்க்கு இவ்வளவு செய்ய மனசாட்சி 🤡இடம் கொடுக்கிறதா?

    • Muruga Vel - Mumbai

      நீங்க ஏழையா

    • சுரேஷ் -

      நீங்க எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்திங்க.

    • சுரேஷ் -

      Please don't repeat the same comment

    • சுரேஷ் -

      நீங்க எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்திங்க.

    • சுரேஷ் -

      நீங்க எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்திங்க.

    • Sivak - Chennai

      சொந்தமா உழைச்சு சம்பாதிச்ச காசா இருந்தா இவ்வளவு செலவு செய்ய மனசு வருமா

    • Vena Suna - Coimbatore

      ஆரூர் ரங், நாய்கள் வளர்பவருக்கு தெரியும்.அவை பாசம் மிகுந்தவை.அவர்களுக்கு அது நாய் அல்ல. ஒரு குழந்தை .அவர்கள் காசு. ஏழைகள் ,ஏழைகள் என்று எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது.மேலும் அவர் அரசுக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுத்து உள்ளார்.

    • Aarkay - Pondy

      எழுபத்தாண்டு கால கான்+க்ராஸ் ஆட்சி, ஏழையை ஏழையாகவே வைத்து, இலவசத்திற்கு கையேந்தும் பிச்சைக்காரனாக்கியது. உழைத்து சாப்பிட மனமின்றி, சோம்பேறியாக்கியது. அவர் அந்த இருக்கைகளை வாங்கவில்லையென்றால், அவை கோவிட காலத்தில், காலியாகவே இருந்திருக்கும். ஒருவகையில் அவர் நஷ்டத்தில் இயங்கும் airline-ற்கு உதவியே இருக்கிறார். உழைக்க மனமில்லாத டாஸ்மாக் கூட்டம் என்றும் உருப்படப்போவதில்லை. அவர்கள் நிலைக்கு அவர்களும், அரசும் காரணம். பொறாமை இருந்தால் போதாது. முடிந்தால் சம்பாதித்து, ஏழைகளுக்கு உதவ முயலுங்கள். கைவசம் ஜெலுசில் வாங்கி வைத்துக்கொள்ளவும்.

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    சிலர் செல்ல பிராணிகள் தங்கள் சொந்த பிள்ளையை போல பார்த்துக்கொண்டு வளர்ப்பார்கள் ....இங்கு வசிக்குமிடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதியினரின் செல்ல பூனை காணாமல் போக அதற்காக நோட்டிஸ் எல்லாம் அடித்து கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானமும் வழங்கப்படும் என்று கூறி இருந்தனர் .....

Advertisement