dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Share
Tamil News
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், தமிழகம் சார்பில் பேச வேண்டிய ஏராளமான பிரச்னைகள் இருந்தும், தமிழக நிதி அமைச்சர் பங்கேற்கவில்லை. இது, தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி. தமிழக பிரச்னைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை; இது, மக்களை மதிக்காத எதேச்சதிகாரம்.


'டவுட்' தனபாலு: முக்கியமான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்த தமிழக நிதியமைச்சர், அதற்காக கவலைப்பட்டது போல தெரியவில்லை. அவரின் தெனாவெட்டை பார்க்கும் போது, முதல்வர் சொல்லி தான் இப்படி நடந்து கொள்கிறாரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி:
உள்ளாட்சி தேர்தலில், எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான செய்திகள் வருகின்றன. லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், என் வீட்டில் பணமோ, கிலோ கணக்கில் நகையோ கைப்பற்றப்படவில்லை. என்னிடம் கைப்பற்றிய 5,600 ரூபாய் மற்றும் 500 சவரன் நகைக்கு கணக்கு உள்ளது என்பதால், திருப்பி கொடுத்து விட்டனர்.


'டவுட்' தனபாலு: ஏற்கனவே தொடர்ந்து முந்தைய அ.தி.மு.க., அமைச்சர்களை குறிவைத்து நடத்தப்படும் சோதனைகள், பலவிதமான, 'டவுட்'டுகளை கிளப்புகின்றன. எதிரணியை கலங்க அடிக்க வேண்டும் என்பதற்காக லேசாக அப்படியிப்படி சோதனை செய்யப்படுகிறதோ; உண்மையாக நடத்தப்படவில்லையோ என்ற, 'டவுட்' வருகிறது!


பத்திரிகை செய்தி:
'வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்; பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில், தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.


'டவுட்' தனபாலு: தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டத்தால், மத்திய அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. இப்படித் தான் காலம் காலமாக கம்யூனிஸ்ட்டுகள் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து தி.மு.க., கூட்டணியின் பிற கட்சித் தலைவர்களும் கற்றுக் கொண்டனரோ என்ற, 'டவுட்' வருகிறது!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    காரணமில்லாமல் ஒருவர் வீட்டில் லட்சக்கணக்கில் பெறுமானமுள்ள 'மணலை' போய் பதுக்கி வைப்பாரா என்ற சந்தேகம் வந்து, அதைக் கைப்பற்றி சோதனை செய்ய வேண்டுமென்பதுகூட தெரியாத அதிகாரிகள் உள்ளவரை, எந்த பயமும் இல்லாமல் வேண்டியமட்டும் பாத்துக்கலாம், தைரியமாக அறிக்கையும் விடலாம்

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    \\அவரின் தெனாவெட்டை பார்க்கும் போது, முதல்வர் சொல்லி தான் இப்படி நடந்து கொள்கிறாரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது\\........ இதுலே சந்தேகமே வரக்கூடாது .......... ஸ்டாலின் சொல்லாம இந்த மாதிரி செய்யற அளவுக்கு "வளைகாப்பு மன்னருக்கு" துணிவு இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி ........ எதுக்காக ஸ்டாலின் இப்படி செய்யணும்கறதுதான் என்னோட தீராத டவுட்.

Advertisement