dinamalar telegram
Advertisement

விதிகளை மீறிய 5 ஓட்டல்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ்

Share
Tamil News
கடலுார் : கடலுாரில் பாதுகாப்பு விதிகளை மீறிய 5 ஓட்டல் கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

கடலுார் செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், இம்பீரியல் சாலையில் 5 ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்திரசேகரன், சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.சமைத்திருந்த சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி பொருட்களில் செயற்கை கலர் பயன்படுத்தப்படுவது கண்டறிந்து 3 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர்.முதல் நாள் சமைத்த 5 கிலோ இறைச்சியை மறுநாள் பயன்பாட்டிற்காக குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததையும் பறிமுதல் செய்து அழித்தனர்.உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக 5 கடை உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement