dinamalar telegram
Advertisement

பாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு!

Share
புதுடில்லி: பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், 48. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவினார். இதன் வாயிலாக தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் மும்பை மற்றும் லக்னோவில் சோனு சூட் உடன் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த செப்.15 ல் சோதனை நடத்தினர். 'ரியல் எஸ்டேட்' தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
மும்பையை சேர்ந்த பிரபல நடிகருக்கு சொந்தமான இடங்களிலும், லக்னோவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டில்லி, குருகிராமில் உள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
நடிகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் இடங்களில் நடந்த சோதனையின் போது, அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவரை 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனுசூட் போலியான நிறுவனங்களிடம் இருந்து போலியாக கடன் வங்கி கணக்கில் வராத சொத்து சேர்த்து உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    கடைசியில் இவனும் ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் என்பதனை படிக்கையில் வேதனை தான் மிஞ்சுது

  • அப்புசாமி -

    ஐயோ பாவம். நிறைய பேருக்கு நிறைய ஒத்தாசைகள் செஞ்சாரே... இவர் பா.ஜ வுல சேராததுதான் பெரிய தப்பு.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    யாரைத்தான் நம்புவதோ?

    • HSR - MUMBAI,இந்தியா

      யாரை வேண்டுமானாலும் நம்புங்க பாதிரி தவிர

    • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

      டுமீலன்ஸ் திராவிடம் என்று பேசும் விஷத்தை இன்னமும் நம்புகிறாங்க அதை விட இவர் ஆபத்தானவர் இல்லை

    • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

      ஹஸ்ர அவர்களே நீங்க கூறுவது போல எல்லாரும் கெட்டவர்கள் இல்லை , எல்லாரும் நல்லவர்களும் இல்லை , ஐயா அல்போன்ஸ் அவர்கள் பலநேரங்களில் இந்திய நலனை கருத்தில் கொண்டு மட்டுமே பதிவிட்டு வந்துள்ளார் , தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்த பின்னர் தான் தமிழ்நாட்டில் மாய ஊடகங்களின் திரை எண்களின் கண்ணில் விலகியது

  • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

    வரி ஏய்ப்பை மறைக்கத்தான் பல்வேறு உதவிகளை செய்து வந்தாரோ ? இருபது கோடியை ஏமாற்றுபவர் இருபது லட்சம் வரை செலவு செய்வது அவருக்கு நட்டம் அல்ல

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இவன் பாபா பெயரை கெடுக்கிறான்

Advertisement