dinamalar telegram
Advertisement

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆராய்ச்சி மையம்

Share
சென்னை: ‛‛டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இன்று செப்.,18: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 19ம் தேதி: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல், மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
செப்., 20 ம் தேதி: தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்., 21ம் தேதி: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

செப்., 22 ம் தேதி: சேலம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24மணி நேரத்தில் பதிவான மழைஅளவு (சென்டி மீட்டரில்:



திருவாடானை (ராமநாதபுரம்) 12 செ.மீ., தொண்டி (ராமநாதபுரம்) 11 செ.மீ., பெருங்கலுார் (புதுக்கோட்டை) 10 செ.மீ., கள்ளிகுடி (மதுரை) 9 செ.மீ., விராலிமலை (புதுக்கோட்டை), காரியாபட்டி (விருதுநகர்) தலா 7 செ.மீ., ஆலங்குடி (புதுக்கோட்டை), மன்னார்குடி (திருவாரூர்), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 6 செ.மீ.,

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement