dinamalar telegram
Advertisement

ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்

Share
புதுடில்லி: மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுகிறார்.


சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வேண்டி இருந்தது.


இந்நிலையில், ம.பி.,யில் காலியாக இருக்கும் ராஜ்யசபா இடத்திற்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. அதில், ம.பி.,யில் இருந்து முருகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.



அதேபோல், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவல், அசாமில் இருந்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ம.பி., மற்றும் அசாமில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், இரு அமைச்சர்களும் எளிதாக வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

  • Venugopal Subramanian -

    0..

  • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

    தமிழக அரசு பெட்ரோல் விளைய குறைச்சுட்டா என்பதே தெரியாம பேட்டி கொடுக்க உக்காந்து அசடு வழிந்தது எல்லாம் வரலாறு.. மொத்தத்தில் பி ஜெ பி க்கும் திறமைக்கும் வெகு தூரம். யாரும் நேரலை பேட்டி னுட்டு இவா கிட்ட போனா அசட்டு சிரிப்பு நிச்சயம்..

  • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

    மற்ற மாநில காரர்கள் எப்போதாவது தமிழ் நாட்டிலிருந்து ராஜ்ய சபாக்கு பொய் இருக்கிறார்களா? சந்தேகமே. தமிழக அரசியல் வாதிகளுக்கு அது ஒரு பெரிய குற்றம் ஆயிற்றே?

  • sankaseshan - mumbai,இந்தியா

    Me. Ravikumar , மௌன்மோஹன் சிங் அசாம் மாநில ராஜ்ய சபா MP யாக தேர்வு செய்யப்பட்டு PM ஆக இருந்தார்

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    பாண்டிச்சேரி தமிழர்கள் பிச்சை போட மறுத்துவிட்டனர் போலும்... தேர்தலில் மண்ணைக்கவ்வி பட்ட அசிங்கம் போதாதென்று இப்போது இது வேறு... காமெடி சங்கீஸ்

Advertisement