dinamalar telegram
Advertisement

ரயில்வே துறை சார்பாக 50,000 இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

Share
புதுடில்லி: ரயில்வே துறை சார்பில் 18 - 35 வயது வரையிலான 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு, மத்திய அரசு சார்பில் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் ஓராண்டுக்கு கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 18 - 35 வயது வரையிலான 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டில்லியில் நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ள இந்த காலத்தில், இந்த பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். குக்கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். 'எலக்ட்ரீஷியன், வெல்டர், பிட்டர் மற்றும் மெக்கானிக்' என, நான்கு வகை பயிற்சிகள் நாடு முழுதும் உள்ள 75 ரயில்வே பயிற்சி மையங்களில் அளிக்கப்படும். ரயில்வே மையங்கள் வாயிலாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலித்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த பயிற்சி பெற்றவர்கள் ரயில்வேயில் வேலை கோர உரிமை கிடையாது. முதற்கட்டமாக 1,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொருவருக்கும் 100 மணி நேரம் என அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி முடிவில், தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து மையத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • jies - Chennai,இந்தியா

  பயிற்சி என்பது படிப்பு. அதில் சிறந்து விளங்கினால் , உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் தானே வேலை வாய்ப்பு கிடைக்கப்போகிறது. அதை விடுத்து கழக திராவிட சிந்தனையில் தனக்கு எல்லாமே இலவசமாக கிடைக்க வேண்டும் என்ன எண்ணம் இருந்தால், உழைப்பை அவமதித்தால் அதற்கு உண்டான பலன் கிடைக்கப்போகிறது. இதில் என்ன சந்தேகம்?

 • அப்புசாமி -

  எல்லோரும் ரயில்வேயில் ட்ரெய்னிங் எடுத்துட்டு டீக்கடை ஆரம்பிக்கலம்.

  • Yezdi K Damo - Chennai

   Will they teach how to make Pakoda ????????????

  • Muruga Vel - Mumbai

   எல்லாரும் டீக்கடை ஆரம்பிச்சா பாத்திரம் கழுவ சிலர் இருப்பாங்க ..

 • அப்புசாமி -

  பயிற்சிதான் குடுப்போம். வேலை, வெட்டியெல்லாம் கேக்கப்படாது.

 • அப்புசாமி -

  பயிற்சி தான் குடுப்போம். வேலை, வெட்டியெல்லாம் கேக்கப்படாது.வேணும்னா சீன, மலேசியா, ரஷ்யா ரயில்வேயில் வேலை வாங்கிக் கொண்டால், பிரதமர் இங்கே மெடல் குத்திக்குவார். வருஷம் ரெண்டு கோடி பேருக்கு வேல குடும்ப்போம்னு சொல்லி ஆச்சியைப் புடிச்சவங்க, செஞ்ச்சுட்டாங்கா.

  • ஆரூர் ரங் -

   வேலைகளை உருவாக்குவோம் என்றுதான் உறுதிமொழி கொடுத்தார். 🙏 வேலை கொடுப்பது அரசின் வேலை அல்ல. வேலை செய்வதற்கு ஏற்றவாறு தயார் செய்வது மட்டுமே அரசு செய்யவேண்டியது. நாள் முழுவதும் டாஸ்மாக்கில் விழுந்துகிடக்கும்😇😇 டுமீல்க்கு எந்த வேலையும் தர முடியாது. விழலுக்கு இறைத்த நீர்.

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  கொத்தனார் கார்பெண்டர் பிளம்பர் JCB ரோலர் க்ரென் போன்ற இயந்திர வானங்களை இயக்கும் ட்ரைவர் மெக்கானிக் போன்ற தரம் வாய்ந்த ஸ்கில்ட் தொழிலாளர்களை தயாராக்கணும் ..L &T போன்ற நிறுவனங்களுக்கு வரி சலுகை கொடுத்து தொழிலாளர்களை உருவாக்கணும்

Advertisement