dinamalar telegram
Advertisement

பிரிட்டன் இளவரசர் பிலிப் உயில் 90 ஆண்டு சீல் வைக்க உத்தரவு

Share
லண்டன்:'பிரிட்டன் இளவரசர் பிலிப் எழுதிய உயிலை, 90 ஆண்டுகள் 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும்' என, லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 95. இவரது கணவர் இளவரசர் பிலிப், ஏப்., மாதம், 99 வயதில் மரணம் அடைந்தார்.


இளவரசர் பிலிப் எழுதியுள்ள உயில் தொடர்பாக லண்டன் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.இதன்படி அவரது உயிலில் உள்ள விபரங்களை வெளிப்படுத்தாமல் இருக்க, அதை 90 ஆண்டுகள் 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:


மறைந்த இளவரசர் பிலிப், அவரது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கவுரவத்திற்காக தன் உயில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இறையாண்மை மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களின் கவுரவத்தை பாதுகாக்க, தனி நபர்களின் தனிப்பட்ட ரகசியங்களுக்கான பாதுகாப்பு அவசியமாக உள்ளது. எனவே இளவரசர் பிலிப்பின் உயிலை 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்படுகிறது. உயிலின் நகலை பதிவு செய்யவோ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பிரிட்டனில் எந்த ஒரு நபரின் உயிலும் பொது ஆவணமாக கருதப்பட்டு வருகிறது.
ஆனால் அரச குடும்பத்தினரின் உயில் மட்டும், அதை சார்ந்தவர்களின் விருப்பத்திற்கு இணங்க உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சீல் வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    இதை விட அந்த உயில்களை குப்பையில் போட்டு எரிப்பது மேல். டயானாவுக்கு செய்த கொடுமை, கொலை எல்லாம் சொல்லி இருப்பார். அதான் வெளியிட முடியவில்லை, உயில் என்பது தனக்குப்பின் என்ன யாருக்கு சொந்தம் என்பதுதான், அதைவிட எல்லாவற்றையும் அவர் போகும்போது அதையும் அவருபோன மாயணத்துக்கே எடுத்த போயிருக்கலாம்.

  • Sundara Raman - bengaluru,இந்தியா

    இங்கிலாந்தில் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதில் ரகசியம் என்ன வேண்டியிருக்கிறது.

  • MANIAN K - Dubai ,இந்தியா

    தொண்ணூறு ஆண்டுகளுக்கு பிறகு “கவுரவம்” போனால் சரி. இப்போது காக்க வேண்டும் திருடிய பொருட்களை “கர்வத்தோடு” காட்சி படுத்தும் நாடல்லவா

  • Bhasskar Kg - chennai,இந்தியா

    ஏன் இந்த குடும்ப செய்திகளை தொடர்ந்து எழுதுகிறீகள் , 75 வருடம் கடந்தும் அடிமை எண்ணம் உங்கலை விட்டு போகவில்லையா?

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    இது ஒரு வகை சாதீய உயர்வு மனப்பான்மை . ப்ளூ பிளட் என்றால் தனி ரகமாம்

Advertisement