dinamalar telegram
Advertisement

பீகாரிகளை கோடீஸ்வரர்களாக மாற்றி வரும் வங்கிகள்

Share
பாட்னா: நாட்டில் நடுத்தர குடும்பத்தினர் ஏராளமானோர் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பீகாரில் மட்டும் அம் மாநில மக்களை வங்கிகள் கோடீஸ்வரர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையை உருவாக்கி வருவதாக தெரிகிறது.

பீகார் மாநில மக்கள் கடந்த சில நாட்களாக ஆச்சரியம் கலந்த சந்தோசத்தில் திளைத்து வருகின்றனர். இதற்கு காரணம் தங்களின் வங்கி கணக்கில் எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கில் வருவாய் வந்து சேர்வதே இதற்கு காரணம்.

கடந்த வாரத்தில் மாநிலத்தின் ககாரியா பகுதியை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.1.16 லட்சம் வரவு வைக்கப்பட்டது. இதனை கண்டு பிடித்த வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி தர கோரினர். ஆனால் அந்த நபரோ பிரதமர் தருவதாக கூறிய தொகையின் ஒரு பகுதி தான் இது எனவும் அதனை திருப்பி தர முடியாது எனவும் தெரிவித்து உள்ளார்.

இரண்டாவது சம்பவமாக கதிஹார் மாவட்டத்தில் பள்ளி கல்வி பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.900 கோடி வரவு வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது முசார்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராம் பகதூர் ஷா வின் வங்கி கணக்கில் ரூ.52 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.. இது குறித்து அவர் முதலில் நம்ப மறுத்துள்ளார். தொடர்ந்து தனது ஆதார் அட்டையை எடுத்து கொண்டு வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கை சரி பார்த்துள்ளார். அதில் 52 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதை உறுதி படுத்தினார்.

இதனை அடுத்து அவர் அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் இந்த தொகையில் சிலவற்றை எங்களுக்கு தாருங்கள், இதனால் எங்கள் வாழ்நாள் முழுவதும் சுமூகமாக செலவிட முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ராம் பகதூர் ஷா வின் மகன் சுஜித்குமார் குப்தா கூறுகையில் நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை பற்றி கவலைப்படுகிறோம். அதே நேரத்தில் நாங்கள் விவசாயிகளாகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதால் அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

இது குறித்து போலீசார் கூறுகையில் விவசாயி ராம் பகதூர் ஷா வங்கி கணக்கில் வரவு வைத்துள்ள பணம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்துவர் என கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (25)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சரி, இதையெல்லாம் டெபாசிட் செய்த யோக்கியவானை கண்டு பிடிக்க முடியவில்லையா?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  வேறு விதமான சந்தேகங்கள் வருகிறது. வெளிநாடுகளின் சாதியாக சைபர் அட்டாக் ஆகா இருக்குமோ என்று கூட. நிறைய வங்கிகளின் தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன. பீகாரின் பல பகுதிகளிலிருந்தும் அங்குள்ள செல்போன் எங்களிலிருந்தும் தான் பல்வேறு அழைப்புக்கள் வருகின்றன, வங்கியை சார்ந்தவர்கள் என்றும் கே ஒய் சி அப்டேட் செய்யவேண்டும் உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்பவேண்டியிருக்கிறது அது இது என்று பல தகிடு தத்தங்களை செய்கிறார்கள். தமிழகத்திலிருப்போருக்கும் சிலர் ஹிந்தியில் பேசிவிட்டு அதன் பிறகு ஆங்கிலத்தில் பேசுவதும் பின்னர் தமிழில் பேசுவதுமாக தகவல் மற்றும் ஓ டி பி திருடுவதற்கு முயற்சிப்பதும் தெரிகிறது. எந்த வித சரிபார்ப்புகளும் விண்ணப்பங்களும் இல்லாமல் சகட்டு மேனிக்கு அங்கே சிம் கார்டுகள் வழங்கப்படுகின்றன என்றும் சொல்கிறார்கள். பிஹார் இன்றும் பாகிஸ்தானின் கராச்சி போலத்தான் இருக்கிறது. அங்கிருந்து முதன்மை தேர்வில் வெற்றி பெற்று வருபவர்களின் வெற்றியில் சந்தேகம் கூட தெரிகிறது. மாநிலத்தின் முதலாவதாக வந்த பள்ளி மாணவிக்கு எதுவுமே தெரியவில்லை என்பது ஒரு டிவி யின் நேரடி பெட்டியில் தெரியவந்து அதிர்ச்சி அளித்தது இரண்டு வருடங்களுக்கு முன்புதான். பீகார் நடுவனராசல் அதிகம் கண்காணிக்கப்படவேண்டியது அவசியம்.

  • Srinivas.... - Chennai,இந்தியா

   பீகாரில் நடப்பது பீஜேபி கூட்டணி அரசு என்பது தெரியாதா? வட மாநிலங்களில் என்னவேண்டுமானாலும் நடக்கும். நீட் தேர்வின் வினாத்தாள் 35 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இதுதான் பீஜேபி அரசின் யோக்கிதை....

  • Hari - chennai,சவுதி அரேபியா

   அன்னே செடியை விட்டுவிட்டு வேர்க்கடலையை திருடும் கும்மல் இங்கே ஆட்சியில் இருக்கு ,இதை நான் சொல்லல இன்னோவா சம்பத் சொல்லியுள்ளார் அவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.

 • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

  ஹவாலா பணத்தை பதுக்கத் தான் எழுதப் படிக்கத் தெரியாதவன் பேரிலே எல்லாம் கணக்கை தொறந்து வெச்சானுங்க.

  • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

   ஹவாலா வழிமுறையை உண்டாக்கிய மூர்க்க குழுவில் இருந்து இவன் ஒருத்தன் ரொம்ப யோக்கியன்

 • சீனி - Bangalore,இந்தியா

  லல்லு ஜெயில்ல இருக்க போய், பணம் பெருகி, வங்கிங்க அட்டகாசம் அதிகமாயிடுச்சு....:)

 • S.PALANISAMY - COIMBATORE,இந்தியா

  On one side , Govt of India doling out major collections made from Maharashtra and Tamilnadu to U.P and Bihar on the other side, Banks are vyving to make the Biharis richer over night. But, one person has rightly understood and claimed the amount of Rs.5.5 lakh he received was the first instalment of Rs.15 Lakh promised by Narendra Modi. He was lucky. We are yet to receive the first instalment, for which the whole nation is awaiting.

Advertisement