dinamalar telegram
Advertisement

சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு மயக்கம்

Share
வேலுார்: வேலுாரில் ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 10 மாணவர்கள் மயக்கம் போட்டு விழுந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


வேலுார் மாவட்டம், வேலுார் அருகே ஓட்டேரியில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. வேலுார் அரசு முத்துரங்கம் கலைக்கல்லுாரியில் படித்து வரும் மாணவர்கள் சிலர் இந்த விடுதியில் தங்கியுள்ளனர். இன்று காலை 10:00 மணிக்கு இவர்கள் கல்லுாரிக்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் 10 மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். ஆசிரியர்கள் அவர்களை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


பாகாயம் போலீசார் விசாரித்தனர். அதில், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு விடுதிக்கு அருகில் தள்ளு வண்டி கடைகளில் சிக்கன் வாங்கி வந்து சாப்பிட்டதும், பழைய சிக்கன் என்பதால் புட் பாய்சன் ஏற்பட்டு மயங்கி விழுந்ததும் தெரியவந்தது.
போலீசார் விடுதி எதிரில் உள்ள சிக்கன் விற்கும் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement