dinamalar telegram
Advertisement

மாஜி அமைச்சர் வீரமணியின் சொத்து மதிப்பு குறித்து ஆய்வு

Share
வேலுார்: மாஜி அமைச்சர் வீரமணியின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் அவரது சொத்து மதிப்பு குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி. அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரம், பள்ளிக்கல்வி, வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தார்.
பல்வேறு முறைகேடுகள் மூலம் அளவுக்கதிமாக சொத்துக்கள் சேர்த்ததாக அவர் மீது புகார்கள் வந்தன. வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வீரமணியின் மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்று வீரமணியின் வீடு அவரது ஆதரவார்கள், பினாமிகள் என 35 இடங்களில் சோதனை நடந்தி பணம், நகை, சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள், கார், மணல், வங்கி பாஸ் புத்தகங்கள், அமெரிக்க டாலர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.


இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஒன்பது சொகுசு கார்கள் யாருடைய பெயரில் வாக்கப்பட்டது என போக்குவரத்துத்துறையினரிடம் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்குகள் முடக்கவும், லாக்கர்களை சோதனை செய்யவும் ஏற்பாடுகள் நடக்கிறது.அவரது வீட்டில் பறிமுதல் செய்த சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் மூலம் சொத்துக்கள் முழு மதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அமெரிக்க டாலர் எப்படி வந்தது என்று அவரிடம் விசாரித்து வருகிறோம். மேலும் சில இடங்களில் விரைவில் சோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


இந்நிலையில், வீரமணி மற்றும் அவரது பினாமிகள் சிலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று இரண்டாவது நாளாக விசாரணை ந டத்தி வருகின்றனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement