dinamalar telegram
Advertisement

முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரணை

Share
வேலுார்: கனிம வளத்துறை அதிகாரிகள் மாஜி அமைச்சர் வீரமணி வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.


வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வந்த புகாரையடுத்து திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரமணி வீடு, அலுலவகம், ஆதரவாளர்கள், பினாமிகள் என 35 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், இடையம்பட்டியில் உள்ள வீரமணியின் வீட்டில் நடத்திய சோதனையில், பணம், நகைகளோடு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணல் இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.


சாதாரணமாக நடக்கும் சோதனையில், பணம், நகைகள் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் முதல் முறையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் மணல் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இது குறித்து வேலுார் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதில், வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றுப் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மணல் கொண்டு வந்து அவரது வீட்டில் மலை போல குவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கனிம வளத்துறை அதிகாரிகள் மணல் குறித்து கேட்டதற்கு பதிலளிக்க வீரமணி மறுத்து விட்டார். இதனால் ஜோலார்பேட்டை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


இது குறித்து போலீசார் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் பவர் புல் அமைச்சராக வலம் வந்த வீரமணி பல்வேறு கட்டடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் கட்டி வருவதாகவும், அதற்காக பாலாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன. வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் இருந்து வீரமணியின் ஆதரவாளர்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திற்கு மணலை கடத்திச் சென்று விற்பனை செய்து வருவதாகவும் சென்னை வரை புகார்கள் சென்றன. தனது அரசியல் செல்வாக்கால் நடவடிக்கை எடுக்காமல் அவர் பார்த்துக் கொண்டார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகும் மணல் கடத்தலில் ஈடுபட்ட அவரது ஆதரவார்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், வீரமணி வீட்டில் மணல் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர் மீண்டும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவது உறுதியானது. கனிம வளத்துறையினர் ஆய்வுக்கு பிறகு வருவாய்த்துறை மூலம் மணலின் தற்போதைய சந்தை மதிப்பு கணக்கிடப்பட்டு எத்தனை யூனிட் என உறுதிபடுத்தப்பட்ட பின் மணல் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பொதுப்பணித்துறையினரிடம் புகார் பெறப்பட்டு தனியாக வீரமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும். மணல் கடத்தலில் அவர் கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சொத்து மதிப்பு குறித்து ஆய்வுஇது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஒன்பது சொகுசு கார்கள் யாருடைய பெயரில் வாக்கப்பட்டது என போக்குவரத்துத்துறையினரிடம் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்குகள் முடக்கவும், லாக்கர்களை சோதனை செய்யவும் ஏற்பாடுகள் நடக்கிறது. அவரது வீட்டில் பறிமுதல் செய்த சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் மூலம் சொத்துக்கள் முழு மதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அமெரிக்க டாலர் எப்படி வந்தது என்று அவரிடம் விசாரித்து வருகிறோம். மேலும் சில இடங்களில் விரைவில் சோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், வீரமணி மற்றும் அவரது பினாமிகள் சிலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  முகத்தை பார்த்தல் தண்ணீர் கூட குடிக்க முடியாதே

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான எல்லா இடங்களிலும் சோதனை நடந்தால், அந்த 'காணாமல் போன கிணறு' (வடிவேல் பட காமெடி) கூட கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் தமிழகத்தில் 'காணாமல் போன ஏறி,குளம், குட்டைகள் கூட கிடைக்க வாய்ப்புண்டு.' ஆகையால் நன்றாக சோதனை செய்யுங்கள். பாதியில் விட்டு விடாதீர்கள் அந்த வேலுமணி கேசில் நடந்ததுபோல்...

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  ஏன் இவ்வளவு நாளாக இந்த திருட்டு நடந்தும் நடவடிக்கை எடுக்காமல் வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய அதிர்க்காரிகளை தண்டிக்க முடியும்

 • Shekar - Mumbai,இந்தியா

  இவர் 11:05 க்கு முன்பே மணல் எடுத்துவிட்டார் அதனால் தக்க தண்டனை கொடுக்கவேண்டும் யுவர் ஆனர். வாழ்க தமிழகம், வளரட்டும் திமுக அதிமுக, ஒழியட்டும் மக்கள்.

 • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  இப்போ இந்த மணல் விஷயத்துல துரைமுருகனாலா கூட காப்பாத்தமுடியுமா னுட்டு தெரியல வ்வொய் கைது விஷயத்துக்கு முதல் போனி இவா தானோ?

Advertisement