dinamalar telegram
Advertisement

தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: உதயநிதி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Share
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரத்தில் பதிலளிக்கும்படி திமுக எம்.எல்.ஏ., உதயநிதி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. உதயநிதி தனது வேட்புமனுவில், தன் மீதான குற்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. தவறான தகவலை தெரிவித்து உள்ளார். அதனால், அவரது வெற்றி செல்லாது என தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கும்படி உதயநிதி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை அக்.,1ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இதென்னய்யா கொடுமையாக இருக்கிறது? வருங்கால தமிழக முதல்வர், வருங்கால இந்திய பிரதமர், வருங்கால ஐநா செயலாளர். அவரை நேரில் ஆஜர் ஆகச் சொல்லலாமா? இது அடுக்குமா?

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    , ஏண்இந்த வம்பில் மாட்டிக்கொண்டாய் உன் அப்பன் முதல் அமைச்சர் என்கிற துணிச்சலாலா ?

  • sri - mumbai,இந்தியா

    கோர்ட்டாரவர்களே , சில பல நடிகர்கள் வழக்குகளில் பார்த்தோம் , வெளிநாட்டு கார்கள் இறக்குமதி செய்து , நுழைவு வரி விலக்கு கேட்டு போட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு சொல்ல ஒன்பது வருடங்கள் ஆகின்றது. இந்த நடிகர் , முத்தமிழ் வித்தகர் வழித்தோன்றல் , வருங்கால முதல்வர் , சம்பந்தப்பட்ட , அரசியல் காழ்ப்பு வழக்கில் என்ன அவசரம் ? இவ்வளவு சீக்கிரம் அவர் பதிலை கேட்கிறீர்கள் ? நாங்கள் பார்க்காத நீதிமன்றமா , வழக்கா , கமிஷனா ? ஆற அமர விசாரித்து , அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒய்வு பெற்றபின் தீர்ப்பு சொன்னால் போதும் .

  • bal - chennai,இந்தியா

    வோட்டு போட்ட மக்களை சொல்லணும்...இது மாதிரி ஆளுக்கு ஏன் வோட்டு போட்டேங்க.

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

    "இதனை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்." இந்த ரவிக்கு உயிர் பயம் துளியும் கிடையாதா ?

Advertisement