dinamalar telegram
Advertisement

போலீஸ் ஸ்டேசன் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்களை நீக்குக: டிஜிபி உத்தரவு

Share
சென்னை: போலீஸ் ஸ்டேசன் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே நீக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சில போலீஸ் ஸ்டேசன்களில் பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அது பொதுமக்களிடையே ஒரு தவறான புரிதலை காட்டும். எனவே தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க வேண்டும். பெயர் பலகையில் போலீஸ் துறையின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும். புதிதாக பெயர் பலகை வைக்க போலீஸ் ஸ்டேசனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    மிக மிக தேவையான சரியான உத்தரவு .இதை வைத்து தனியார் விளம்பரம் தேடுவது குறையும் .கட்ட பஞ்சாயத்தின் முன்னோடி யா இந்த விளம்பரங்கள் இருக்க இனி வலி இல்லை .

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

    தனியாரிடமிருந்து ஸ்பான்சர் மட்டும் வேண்டும் ...போர்டுக்கு தனியார் காசு தரவேண்டும் ..போலீஸ் கேட்கும்போதெல்லாம் காசு ஓசி சோறு என்று கணக்கே கிடையாது ..ஆனால் ஸ்பான்சர் செய்த போர்டில் நிறுவன பெயர் கூடாது என்றால் எப்படி ? அவ்வளவு சுய கவுரவம் பார்த்தால் , போர்டையும் அரசே செலவு செய்து வைக்கவேண்டும் ...இன்று ஸ்டேஷன் போர்டு ..நாளை பெரிகார்டுகள் ... எதையும் ஸ்பான்சர் செய்யாத அரசியல் வாதிகளை மட்டும் இவர்கள் எண்சாண் உடம்பும் அரைச்சானாக குறுகி ஐயா என்று கூழைக்கும்பிடு போடுவார்கள் ..என்ன நியாயம் இது ?

    • sivan - seyyur,இந்தியா

      நியாமான பேச்சு

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    போலீஸ் ஸ்டேசன் உள்ளே பழைய அரசியல் தலைவர்களின் புகைப்படங்களையும் நீக்க உத்தரவு இடுங்கள். மாறாக புத்தர், கம்பர், பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர் போன்ற சான்றோர்களின் படங்களை வைக்க சொல்லுங்கள்.

    • ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா

      கோத்ரா விவகார ஆட்கள் போட்டோ கூட எடுக்கணும்

  • jayvee - chennai,இந்தியா

    சரியான உத்தரவு.. அப்படியே தனியா நிறுவன விழாவில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அதிகாரிகள் என்ற முறையில் பங்கெடுப்பதையும் நிறுத்தவேண்டும்

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    சூப்பெர் ஷாட், டி ஜி பி சார், அந்தெ போர்டுங்கள பாக்கசொல்லவே கன்றாவியாயிருக்கு

Advertisement