dinamalar telegram
Advertisement

கோடநாடு வழக்கில் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை: ஐ.ஜி.,யிடம் மனு

Share
ஊட்டி: கோடநாடு வழக்கில் பாதுகாப்புக்காக வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடத்த வேண்டும் என, குற்றம்சாட்டப்பட்டவர்கள், மேற்கு மண்டல ஐஜி.,யிடம் மனு அளித்து உள்ளனர்.

கோடநாடு வழக்கில் குற்றச் சாட்டப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி, ஜித்தின் சாய் ஆகியோர் விசாரணைக்கு வர தயார். சில முக்கிய தகவல்களை அளிக்க இருப்பதால், பாதுகாப்பு கருதியும், கோவிட் பிரச்னையாலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த, குற்றச் சாட்டப்பட்ட நபர்களின் வக்கீல்கள் விஜயன், முனிரத்தினம் ஆகியோர் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகரிடம் ஆன்லைனில் மனு அனுப்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement